search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்"

    திருக்கோவிலூரில் பள்ளி வளாகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் சேலாம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து அதே வளாகத்தில் உள்ள விடுதிக்கு இரவு 9 மணி வரை வரவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் பள்ளி வளாகம் முழுவதும் தேடினார். இதையடுத்து பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே இரவு 10.30 மணியளவில் ஆடைகள் கலைந்த நிலையில் மாணவி கிடப்பதை பள்ளி விடுதியின் ஊழியர்கள் கண்டனர்.

    இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜூப்ளி தேவசேனா, உதவி தலைமை ஆசிரியர் கில் பர்ட் குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் உதவி தலைமைஆசிரியர் நேரில் வந்து விசாரனை செய்தனர்.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள மருத்துவக்குழுவினர்கள் மாணவிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் இது குறித்து உடன் போலீசில் புகார் கொடுக்காமல், 2 நாட்கள் கழித்து 3-வதுநாள் அதாவது 15-ந் தேதி தான் பள்ளி தலைமை ஆசிரியை ஜூப்ளி தேவசேனா, மாணவி பலாத்காரத்துக்கு பள்ளி ஊழியர் ஆல்பர்ட் என்கிற ஆல்பர்ட் சவுந்தர்ராஜன் காரணமாக இருக்கலாம் என திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மற்றும் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் மாணவிக்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரனை நடத்தினார்.

    இது தொடர்பாக ஆல் பர்ட்சவுந்தர்ராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆல்பர்ட் சவுந்தர்ராஜன் தற்போது நீதிமன்ற உத்தரவுபடி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியும் மருத்துவ சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இந்த சம்பவத்தை ஏன் உடன் போலீசில் தெரிவிக்க வில்லை. அதற்கான காரணம் என்ன? இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? யார்? புகார் கொடுக்க விடாமல் தடுத்தது யார்? என்றும், தாமதமாக புகார் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்றும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தை பள்ளி தலைமை ஆசிரியை ஜூப்ளிதேவ சேனா உடன் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை. கல்வித் துறை அதிகாரிகாரிகள் 17-ந் தேதி வெளியான செய்தியை பார்த்துதான் கல்வி நிறுவனத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தியுள்ளனர்.

    இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஜெயலட்சமி விசாரனை செய்துள்ளார்.

    இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஜூப்ளி தேவசேனாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மாணவிக்கு ஏற்பட்ட நிலை குறித்து தகவல் அறிந்த உடன் பள்ளிக்கு இரவு சுமார் 12 மணியளவில் வந்துவிட்டேன்.

    அப்போதே மகளிர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவிட்டேன். புகார் கொடுக்க தாமதமானதற்கு காரணம் மாணவியிடம் நன்கு விசாரித்து பிறகு புகார் கொடுத்தோம். கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு உடன் தகவல் தெரிவிக்காதது தவறுதான் என்றும் தெரிவித்தார்.

    தற்போது இந்த வழக்கு குறித்து முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கலெக்டருக்கு விசாரனை அறிக்கையை சமர்பித்துள்ளார். கலெக்டரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் பரபரப்பாக உள்ளது.

    ×