search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு"

    பாகிஸ்தானில் பள்ளி படிப்பை முடிக்காதவர்களும் பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்களும் விமானத்தை ஓட்டி பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். #PIA #PakistanSC
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் ஊழியர்களில் பலர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும், அவர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் சிவில் விமான போக்குவரத்து கழகம் குற்றம் சாட்டியது.

    மேலும் அவர்களின் கல்வி சான்றிதழ்களை சரி பார்க்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்கள் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் 7 பேரின் கல்விச் சான்றிதழ் போலியானவை என கண்டறியப்பட்டது. அவர்களில் 5 பேர் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    இது குறித்து நீதிபதி கூறுகையில், “பள்ளி படிப்பை முடிக்காத நபர்கள், பஸ் கூட ஓட்ட தகுதி இல்லாதவர்கள். விமானத்தை இயக்கி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறார்கள்” என்றார்.

    மேலும் அவர், “தங்களின் கல்வி சான்றிதழ்களை சமர்ப்பிக்காத பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 50 பேர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்” எனவும் உத்தரவிட்டார். #PIA  #PakistanSC
    பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற 82 வயது நீதிபதியின் பெயரில் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #2224cars #FormerJudge2224cars
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக  சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள நிலையில் வேறொரு பதிவு எண் கொண்ட கார் செய்த விதிமீறலுக்கு தனது கட்சிக்காரருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி சிக்கந்தர் ஹயாத் சார்பில் அவரது வழக்கறிஞர் பஞ்சாப் மாகாண வரிவிதிப்பு துறை அதிகாரிகளை அணுகி விசாரித்தார்.

    அப்போது சிக்கந்தர் ஹயாத் பெயரில் மொத்தம்  2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

    இதைதொடர்ந்து, பயன்படுத்தாத காருக்கு அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் மனுதாரரின் புகார் தொடர்பாக இன்னும் ஒருவாரத்துக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாகாண வரிவிதிப்பு துறை இயக்குனர் மற்றும் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. #2224cars #FormerJudge2224cars
    ×