search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் மந்திரி"

    பாலகோட் பகுதியில் நடத்தியதுபோல் இன்னொரு சாகசத்தை நடத்த முயற்சிக்கும் இந்திய அரசு 20-ம் தேதிக்குள் மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் மந்திரி குறிப்பிட்டுள்ளார். #PakistanForeignMinister #ShahMahmoodQureshi #Indiaplanningattack #Balakotattack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் கடந்த 26-2-2019 அன்று ஊடுருவிய இந்திய விமானப்படைகள் அதிரடியாக நடத்திய தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #PakistanForeignMinister #ShahMahmoodQureshi #Indiaplanningattack  #Balakotattack
    இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அது 2-ம் உலகப்போருக்கு பிறகு மிகவும் பெரிய போராக இருக்கும் என பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார். #IndiaPakistanWar #Pakistan #RailwayMinister #SheikhRashidAhmad
    இஸ்லாமாபாத்:

    புலவாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்திய விமானப்படையின் பதிலடி போன்ற நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் அங்கு பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு நாடுகளையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த பரபரப்பான சூழலில், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் அது மிகவும் பயங்கரமானதாக இருக்கும் என பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமது கூறியுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துகளை அடிக்கடி கூறி வரும் அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெரும்பாலும் போர் சூழலுக்கு வந்துவிட்டது. அவசரகால சட்டங்களை ரெயில்வே ஏற்கனவே பின்பற்ற தொடங்கி விட்டது. இந்த போர் கொடூரமானதாக இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் முற்றிலும் தயாராகி விட்டது’ என்று தெரிவித்தார்.

    இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அது 2-ம் உலகப்போருக்கு பிறகு மிகவும் பெரிய போராக இருக்கும் எனக்கூறிய ஷேக் ரஷித், அதுவே இறுதிப்போராகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்தியாவுடன் போரா அல்லது அமைதியா என்பது அடுத்த 72 மணி நேரத்தில் முடிவு செய்யப்படும் எனவும், எனவே அடுத்த 72 மணி நேரம் முக்கியமானது என்றும் கூறினார். #IndiaPakistanWar #Pakistan #RailwayMinister #SheikhRashidAhmad 
    ஜெய்‌ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. இதில் ஆதாரங்கள் இருந்து, அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று தகவல் ஒளிபரப்பு மந்திரி பவாட் சவுத்ரி கூறி உள்ளார். #PulwamaAttack
    இஸ்லாமாபாத்:

    கா‌ஷ்மீர் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்பு மந்திரி பவாட் சவுத்ரி கூறியதாவது:-

    எந்த தாக்குதலும் நடந்த உடனேயே இந்தியா, பாகிஸ்தானை குற்றம்சாட்டுகிறது. அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் இந்த குற்றச்சாட்டில் எந்த அர்த்தமும் இல்லை. இரண்டு பக்கமும் உள்ள சில சக்திகள் இயல்பு நிலையை விரும்புவதில்லை. அந்த பிராந்தியத்தின் உள்நாட்டு போராட்டம் காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. எல்லாவற்றுக்கும் பாகிஸ்தானை குற்றம்சாட்ட கூடாது.



    மிகவும் சாதகமான நாடுகள் அந்தஸ்தில் இருந்து பாகிஸ்தானை நீக்கியது துரதிர்‌ஷ்டவசமானது. ஜெய்‌ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. இதில் ஆதாரங்கள் இருந்து, அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, ‘உலகில் வன்முறை எங்கு நடந்தாலும் பாகிஸ்தான் அதனை கண்டிக்கிறது’ என்றார். #PulwamaAttack

    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் மந்திரி டேனியஸ் அஜீஸை இம்ரான்கான் கட்சியின் முக்கிய தலைவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனல் சமீபத்தில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தியது. அதில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக், பாகிஸ்தான் மக்கள் கட்சி நபீசா ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கான் கட்சி தலைவர் நீமுல் ஹக்கை ‘திருடன்’ என தெரிவித்தார்.

    அதனால் ஆத்திரம் அடைந்த ஹக் மந்திரி டேனியல் அஜீஸை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அஜீஸ் நிலை குலைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் நபீசா ஷா, மற்றொரு சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சியும் பாதியில் முடிக்கப்பட்டது.

    நடந்த சம்பவத்துக்கு மந்திரி அஜீஸ் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “இது பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய சதி. ராணுவம் மற்றும் நீதித்துறையின் பின்னணியில் இருந்து கொண்டு இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு அழிந்து விடுகிறது என்றார்.

    இதுகுறித்து, இம்ரான் கான் கட்சி தலைவர் ஹக் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அஜீஸ் ராணுவ தளபதிகள் குறித்தும், இம்ரான்கான் குறித்தும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசினார். அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டு உண்மையை பேசுவார்” என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு இவர் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜமீல் எஸ்.காம்ரோ மீது தண்ணீர் டம்ளரை வீசியுள்ளார். #Tamilnews
    ×