search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ராணுவம்"

    இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்த எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாமை தாக்கியதற்கு மறுநாள், இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது.இந்நிலையில், இதை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. அதன் செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர் கூறியதாவது:-

    கடந்த மாதம் 26-ந் தேதி, இந்திய போர் விமானங்கள், பாகிஸ்தான் வான் பகுதிக்குள் ஊடுருவி வந்து குண்டுகளை போட்டன.

    ஆனால், உயிரிழப்போ, உள்கட்டமைப்புக்கு எவ்வித சேதமோ ஏற்படவில்லை. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்த நாங்கள் எப்-16 விமானத்தை பயன்படுத்தவில்லை. நாங்கள் பயன்படுத்தியது, சீனாவுடன் இணைந்து தயாரித்த ஜேஎப்-17 ரக விமானங்களைத்தான். இந்த விமானங்களை பயன்படுத்தியது பற்றி அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். எங்களின் தற்காப்புக்கு எது சரியோ, அதை செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். #ArmyJawanKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக இன்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.  சுந்தெர்பானி செக்டாரில் நடத்தப்பட்ட அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

    பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் ராணுவ வீரர் கரம்ஜித் சிங் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.  #ArmyJawanKilled
    பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவியதால் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. #PakistanArmy #Indianquadcopter
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த ஒரு பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஒரு ஆளில்லா உளவு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தியாவை சேர்ந்த ஒரு போர் விமானத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அதில் சென்ற அபிநந்தன் என்ற விமானியை சிறைபிடித்து பின்னர் விடுதலை செய்தது.



    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் சுமார் 150 மீட்டர் தூரம் ஊடுருவியதால் இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானத்தை ராக்சிக்ரி செக்டார் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் இன்று தெரிவித்துள்ளார். #PakistanArmy  #Indianquadcopter 
    ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை தகர்த்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான்  ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. 

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாடு கோட்டு பகுதியில் உள்ள ரஜோரியின் சுந்தர்பானியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. துப்பாக்கியால் சுட்டும், சிறிய கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

    பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளின் மீது தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. #LoC #ceasefire #PoonchLoC
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குல்பூர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரி குறிப்பிட்டார்.

    மேலும், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். #LoC #ceasefire #PoonchLoC
    ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். #PakistanViolatesTruce #JKAttack
    ஜம்மு:

    காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இந்திய நிலைகளை குறிவைத்து அவர்கள் தாக்கும்போது, இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்துகிறது.

    அவ்வகையில், மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் ராணுவம், சுந்தர்பானி செக்டார் கோவூர் பகுதியில் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் வருண் என்ற வீரர் உயிரிழந்தார்.



    இதேபோல், நேற்று அக்னுர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். பிப்மர் காலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. #PakistanViolatesTruce #JKAttack

    பாகிஸ்தான் ராணுவத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறிய நிலையில் போருக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் எதிர்வினையாற்றியுள்ளது. #BipinRawat #PakistanArmy
    இஸ்லாமாபாத் :

    இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.

    இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டிய இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.

    இதற்கிடையே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பதிலடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். மேலும், நமது ராணுவ வீரர்கள் உணர்ந்த அதே வேதனையை அவர்களும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.



    இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் ராணுவம் போருக்கு தயாராக உள்ளது என அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உயிரிழந்த வீரரின் உடலை சிதைத்த இந்திய ராணுவம் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. அவர்கள், கடந்த காலங்களில் இதை போன்று பலமுறை செய்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கட்டுக்கோப்பானது, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் எவ்விதத்திலும் எங்கள் ராணுவம் ஈடுபடாது.

    போருக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். எனினும், பாகிஸ்தான் மக்களின் நலன், அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நலன் கருதி அமைதி வழியில் செல்லவே விரும்புகிறோம்.

    எல்லையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று கடந்த மே மாதம் இந்திய ராணுவம் கோரிக்கை வைத்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இவ்வாறான செயல்களில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டால் நாங்கள் வேறு விதமான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வரும் என ஆசிப் கபூர் தெரிவித்தார். #BipinRawat #PakistanArmy
    பிரதமர் இம்ரான்கானை பாகிஸ்தான் ராணுவம் இயக்குகிறது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Pakistan #ImranKhan

    புதுடெல்லி:

    இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதையே தங்களது புனித கடமையாக கருதி பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    அவர் ஆட்சிக்கு வந்ததால் இந்திய உறவு விவகாரத்தில் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றதுமே இம்ரான்கான் சில கருத்துக்களை வெளியிட்டார்.

    அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இந்த பகுதியில் பதட்டம் நீடிப்பதை விரும்பவில்லை என்று கூறினார்.

    இதை தொடர்ந்து பிரதமர் மோடி இம்ரான்கானுக்கு அனுப்பிய கடிதத்தில் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வ மான வி‌ஷயங்கள் தொடர்பாக ஒத்துழைக்க தயார். இது சம்பந்தமாக பேசுவதற்கும் தயார் என்று கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வந்த பிறகும் எந்த மாற்றமும் தென்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியும், முன்னாள் இந்திய ராணுவ தளபதியுமான வி.கே.சிங். கூறி இருக்கிறார்.


     

    டெல்லியில் பாதுகாப்பு தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற வி.கே. சிங் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை வெளியிட்டார்.

    இம்ரான்கான் பிரதமராக இருப்பதால் இந்திய வி‌ஷயங்கள் தொடர்பாக ஏதேனும் புதிய சூழ்நிலைகளை உருவாக்குவாரா? என்பது எனக்கு தெரியவிலலை.

    ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்திய உறவு வி‌ஷயத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அவர் பாகிஸ்தான் ராணுவம் ஆட்டுவிக்கும் ஒருவராகவே செயல்படுகிறார்.

    அவர் என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உகந்த சூழ்நிலைகள் வந்தால் மட்டும் தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

    பாகிஸ்தானை பொறுத்த வரை இன்னும் ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அதற்கு கட்டுப்படும் நபராக பிரதமர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பெரிய மாற்றங்கள் வந்து விடும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

    ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பிரதமர் இருக்கிறாரா? பிரதமரின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்பதை பொறுத்தே மற்ற வி‌ஷ யங்கள் அமையும்.

    இவ்வாறு வி.கே.சிங். கூறினார்.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும் போது, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் வேறு எந்த மாற்றங்களும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. அவர்களுடைய இயற்கை குணம் மாறாது.

    அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை நீடிப்பதே அவர்களது குணமாக உள்ளது. அதை மாற்ற முடியாது என்று கூறினார். #Pakistan #ImranKhan

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பயங்கரவாதிகளும் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர். 

    இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், இந்த தாக்குதலில் 3 எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 
    ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் தாக்குதலை நிறுத்தும்படி இந்திய படையினருக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் படையினர், மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.#JKFiring #CeasefireCiolation #PakistanTroops #PleadForCeasefire
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்  மட்டும் 700 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர்.

    பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர்.

    இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இவ்வாறு வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் மீண்டும் முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூடு தாக்குதலை நேற்றிரவு 10.30 மணியளவில் நடத்தியுள்ளனர். சிறிய ரக ஆயுதங்களை கொண்டு ராம்கார் பிரிவில் நாராயணபூர் பகுதியில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.  இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மற்றும் கிராமங்கள் இலக்கிற்கு உள்ளாகின.

    இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை கட்டுப்படுத்த பதில் தாக்குதல் நடத்தினர்.  தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது.  இதில் சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

    இதேபோல் ஆர்னியா செக்டாரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். 3 இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. #JKFiring #CeasefireCiolation #PakistanTroops #PleadForCeasefire
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது நேற்றிரவு பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். #PakistanTroops #SambaCeasefire #JammuAndKashmir

    ஸ்ரீநகர்: 

    ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்  மட்டும் 700 முறை அது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர். 

    இதனால் ஆத்திரமடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். 

    இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. 

    இந்நிலையில், பாகிஸ்தான் படையினர் நேற்றிரவு மீண்டும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது நேற்றிரவு பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவீசி தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. #PakistanTroops #SambaCeasefire #JammuAndKashmir
    சர்வதேச எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலை நிறுத்தும்படி இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #PakistanTroops #BSF #PleadForCeasefire

    ஸ்ரீநகர்: 

    ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்  மட்டும் 700 முறை அது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர். 

    இதனால் ஆத்திரமடைந்த எல்லைப்பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியை கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். 



    இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. #PakistanTroops #BSF #PleadForCeasefire
    ×