search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு கேட்டு மனு"

    மத்திய உளவுத்துறை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாராயணசாமியிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் ரவிக்குமார்.

    தமிழகத்தின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், எழுத்தாளருமான ரவிக்குமார். புதுவை லாஸ்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ரவிக்குமார் தனக்கு புதுவை அரசு சார்பில் பாதுகாப்பு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் பெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்களுடன் முதல்- அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, எழுத்தாளர் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க தக்கநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரவிக்குமாருக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.

    இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் நாராயண சாமியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கையெழுத்திட்ட மனுவும் வழங்கப்பட்டது.

    ரவிக்குமார் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுப் பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் அடுத்ததாக எழுத்தாளர் ரவிக்குமாரை கொலை செய்ய குறி வைத்துள்ளதாக என்னிடம் போலீசார் கூறினர்.

    மத்திய உளவு அமைப்பு தகவல் படி இத் தகவலை தெரிவிப்பதாக கூறினர். மத்திய உளவு அமைப்பும் அந்த தகவலை உறுதி செய்துள்ளது.

    எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாரின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் எங்கள் அமைப்பை சீர்குலைக்கும் நடவடிக் கையாகும். அத்துடன் தமிழகத்தில் கருத்தியல் தளத்தில் மதசார் பின்மையை வலியுறுத்தும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை ஆகும்.

    பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடையோரே, அதற்கு முன்னர் நடந்த கோவிந்த் பன்சாரே, தபோஸ்கர், பேரா சிரியர் கல்புர்கி கொலைகளுக்கு காரணம் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. அதனால் இந்த அச்சுறுதலை அலட்சியம் செய்ய முடியவில்லை. ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு தொல்.திருமாவளவன் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×