search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு படையினர்"

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களை கண்டதும் துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

    அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளின் மகள்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளனர். #SupremeCourt #ArmyofficerDaughter #HumanRight
    புதுடெல்லி:

    ராணுவ அதிகாரிகளின் மகள்களான பிரீதி கேதார் கோகலே (வயது 19), கஜல் மிஷ்ரா (20) ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர்.

    அந்த வழக்கில், பாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளனர்.



    குறிப்பாக பணியின்போது, தனிநபர்களாலும், கட்டுக்கடங்காத கும்பல்களாலும் தாக்கப்படுகிற பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று இந்த வழக்கின் மூலம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது வன்முறை கும்பலால் நடத்தப்பட்ட கல்வீச்சுகளை வழக்கில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இந்த வழக்கில் எதிர் தரப்பினராக மத்திய அரசு, ராணுவ அமைச்சகம், காஷ்மீர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
    மானாமதுரை ரெயில்நிலையத்தில், பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுபடையினர் பாட்டுப்பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    மானாமதுரை:

    மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாட்டுப்பாடி, தாளம் தட்டி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்களை எடுத்து செல்வது குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொய்தீன் உத்தரவுப்படி மானாமதுரை ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையில் ரெயில்வே போலீசார், பயணிகளிடம் பாரம்பரிய முறைப்படி வேட்டி, தலைப்பாகை அணிந்து தண்டோரா போட்டு ஆடலுடன் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    அவர்கள் ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்களை கொண்டு செல்ல கூடாது, ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படி பொருட்கள் இருந்தால் அதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும், விதிகளை மீறி பட்டாசு கொண்டு சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்பதை பாட்டுப்பாடி பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    நேற்று மதியம் மானாமதுரை வழியாக சென்ற ரெயில் பயணிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினரின் வித்தியாசமான விழிப்புணர்வு பிரசாரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரின் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 வீரர்கள் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan #TalibanAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக போரிட்டு வரும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என பலரும் தினம் தினம் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.

    அதன்படி இன்று காலை பட்கிஸ் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் தங்கி இருக்கும் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சற்றும் எதிர்ப்பாராத தாக்குதலையும் சமாளித்து எதிர்த்தாக்குதல் நடத்திய போலீசார் 22 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். மேலும், 16 பயங்கரவாதிகள் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக மாகாண செய்தித்தொடர்பாளர் ஜம்ஷித் சஹாபி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், வடக்கு பக்லான் மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  3 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர். அதே வேளையில் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    ஒரே நாளில் இருவேறு மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு தலிபான் உட்பட எவ்வித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும், தலிபான்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் அவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் எனவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Afghanistan #TalibanAttack
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பன்டிப்போரா மாவட்டத்தில் இன்று 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #3militantskilledinBandipora #Bandiporaencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து, இன்று அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி அதிநவீன இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தொடர்ந்து அங்கு இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் காலியா இன்றிரவு தெரிவித்துள்ளார். #3militantskilledinBandipora  #Bandiporaencounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். #JammuKashmir #MilitantsKilled #SecurityForce
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், அதனை பாதுகாப்பு படையினர் திறம்பட முறியடிப்படும் தொடர்கதைகளில் ஒன்றாகிவிட்டது. பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் சில சமயங்களில் வீர மரணம் அடைந்துள்ளனர்.  அதே சமயம் பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தங்தார் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர்களின் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் தீவிரமாக போராடினர்.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் ஊடுருவ முயற்சித்திருக்கலாம் என அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். #JammuKashmir #MilitantsKilled #SecurityForce
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #Anantnag #JammuAndKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை முதல் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் சிலர் சுற்றிவளைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. மேலும், 1 பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

    மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #Anantnag #JammuAndKashmir
    சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarhattack
    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் வெடிக்கச்செய்தனர்.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Chhattisgarhattack #IEDblast #jawanskilled
    ×