search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஜி தீவு"

    தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானது. #Fiji #Earthquake
    சுவா:

    தெற்கு பசிபிக் கடலில் உள்ளது பிஜி தீவுகள். இது 300 தீவுகளை கொண்டது. இங்கு உள்ளூர் நேரப்படி காலை 9.25 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று இரவு 8.25 மணி) கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. அங்கு 6.7 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது.

    தலைநகர் சுவாவுக்கு கிழக்கே 283 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 534 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

    மிக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியதை தங்களால் பெருமளவு உணர முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை.



    பசிபிக்கடல் பிராந்தியத்தில் உள்ள பிஜி தீவுகள் பூகம்ப அபாய வளையத்தில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.

    இதற்கு முன்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடலுக்கு அடியில் 7.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. #Fiji #Earthquake
    பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று காலை 8.2 ரிக்டர் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. #Fijiquake
    சுவா:

    ஓஷியனியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் தீவு கூட்டங்களை கொண்ட பிஜி நாடு அமைந்துள்ளது. இங்கு சுமார் 9 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், அருகாமையில் உள்ள டோங்கா நாட்டில் இருந்து 442 கிலோமீட்டர் மேற்கே பிஜி தீவின் அருகே பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.


    லெவுக்கா மற்றும் ஓவாலாவ் தீவுகளுக்கு இடையே உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.19 மணியளவில் பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டத்தில் 559.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 8.2 அலகுகளாக பதிவாகியுள்ளது.

    இன்றைய நிலநடுக்கம் பல வினாடிகள் நீடித்ததாகவும் லாவ் தீவு கூட்டங்களில் அதிகமாக உணரப்பட்டதாகவும் தெரிகிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. எனினும், அப்பகுதியில் கடல் அலைகள் ஆர்ப்பரிப்புடன் கொந்தளிப்பாக காணப்படுவதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Fijiquake
    ×