என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரதமர் இம்ரான்கான்"
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெஷாவரில் உள்ள கவர்னர் இல்லத்தில் பழங்குடி மாவட்டங்களின் பிரதிநிதிகளை பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நாட்டை வழிநடத்துவதற்கு பணம் எப்படி திரட்டுவது என்பதை காட்டுவேன். நாட்டை வழிநடத்துவதற்கான பணத்தை நாட்டிடம் இருந்தே வசூலிப்பேன்” என சூளுரைத்தார்.
ஓராண்டு காலத்துக்கு மேலாக பழங்குடியினர் மாவட்டங்களில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் செயல்பாட்டில் இல்லாதபோதும், அங்கெல்லாம் அமைதியை பராமரித்து வந்ததற்கு அந்த மக்களுக்கு பிரதமர் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்தார்.
மேலும், பழங்குடியினர் மாவட்டங்களில் பழங்குடி இன மக்களின் கலாசாரம், பாரம்பரியம் அடிப்படையில் புதிய சட்டங்களும், நிர்வாக முறையும் அமலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.
அவரது இந்த வீட்டிற்கு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு படை, குற்றப்புலனாய்வு பிரிவு, வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு என பல்வேறு பிரிவு போலீசார் வந்து குவிந்தனர்.
அந்த குண்டுகள் சோதனை செய்யப்பட்டன. அவை விமானங்களை சுட்டு வீழ்த்தி அழிக்க கூடிய துப்பாக்கி குண்டுகள் என தெரிய வந்தது. அவை ஒவ்வொன்றும் 30 மி. மீட்டர் நீளம் கொண்டவை. அவை செயல்படும் நிலையில் இருந்தன. உடனே அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இவற்றை சிலர் கடத்தி வந்து இங்கு பதுக்கி இருக்கலாம். பின்னர் அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்த போது குண்டுகள் சிதறி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதற்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. #ImranKhan
புதுடெல்லி:
இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதையே தங்களது புனித கடமையாக கருதி பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அவர் ஆட்சிக்கு வந்ததால் இந்திய உறவு விவகாரத்தில் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றதுமே இம்ரான்கான் சில கருத்துக்களை வெளியிட்டார்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இந்த பகுதியில் பதட்டம் நீடிப்பதை விரும்பவில்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி இம்ரான்கானுக்கு அனுப்பிய கடிதத்தில் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வ மான விஷயங்கள் தொடர்பாக ஒத்துழைக்க தயார். இது சம்பந்தமாக பேசுவதற்கும் தயார் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வந்த பிறகும் எந்த மாற்றமும் தென்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியும், முன்னாள் இந்திய ராணுவ தளபதியுமான வி.கே.சிங். கூறி இருக்கிறார்.
டெல்லியில் பாதுகாப்பு தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற வி.கே. சிங் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை வெளியிட்டார்.
இம்ரான்கான் பிரதமராக இருப்பதால் இந்திய விஷயங்கள் தொடர்பாக ஏதேனும் புதிய சூழ்நிலைகளை உருவாக்குவாரா? என்பது எனக்கு தெரியவிலலை.
ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்திய உறவு விஷயத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அவர் பாகிஸ்தான் ராணுவம் ஆட்டுவிக்கும் ஒருவராகவே செயல்படுகிறார்.
அவர் என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உகந்த சூழ்நிலைகள் வந்தால் மட்டும் தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
பாகிஸ்தானை பொறுத்த வரை இன்னும் ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அதற்கு கட்டுப்படும் நபராக பிரதமர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பெரிய மாற்றங்கள் வந்து விடும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பிரதமர் இருக்கிறாரா? பிரதமரின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்பதை பொறுத்தே மற்ற விஷ யங்கள் அமையும்.
இவ்வாறு வி.கே.சிங். கூறினார்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும் போது, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் வேறு எந்த மாற்றங்களும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. அவர்களுடைய இயற்கை குணம் மாறாது.
அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை நீடிப்பதே அவர்களது குணமாக உள்ளது. அதை மாற்ற முடியாது என்று கூறினார். #Pakistan #ImranKhan
பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றதும் அரசில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டார். பிரதமர் பங்களாவில் தங்காமல் ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்கிறார்.
கவர்னர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகள் பங்களாக்களில் ஆடம்பர வசதிகள் கூடாது என்றும் உத்தரவிட்டார். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முதல்கட்ட ஏலம் நடந்தது. அதில் 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. அதில் 8 புல்லட் புரூப் கார்கள். 4 மெர்சிடஸ்பென்ஸ் கார்கள் உள்ளிட்டவை அடங்கும். அவை அனைத்தும் மார்க்கெட் விலையை விட கூடுதலாக ஏலம் போனது.
அடுத்த கட்டமாக பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ள 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட உள்ளன. மேலும் 8 எருமை மாடுகளும் ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவை முன்னாள் பிரதமர் நாவஸ் செரீப் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டவை. #Pakistan #ImranKhan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்