என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரதமர் மோடி சகோதரர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி சகோதரர்"
குஜராத் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோதிடர்களான பண்டிட் ஓம்பிரகாஷ் வியாஸ், கோபால் வியாஸை பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். #LSPolls #PMModi
ஆமதாபாத்:
பிரதமர் மோடியின் குடும்பத்தினர் குஜராத் மாநிலத்தில் தங்களது பூர்வீக கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.
மோடி குஜராத் முதல்வராக நீண்ட ஆண்டுகள் பதவி வகித்த போதும் அவர் தனது குடும்பத்தினர் யாரையும் அரசியல் பக்கம் அழைத்து வரவில்லை. இதனால் மோடி குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரிலேயே இருக்கிறார்கள்.
மோடி பிரதமர் ஆன பிறகும் அவரது குடும்பத்தினரிடம் மாற்றங்கள் ஏற்படவில்லை. என்றாலும் மோடியின் சகோதரர்கள் எங்கு சென்றாலும் பா.ஜனதா தலைவர்கள் வரவேற்று உபசரிக்கிறார்கள்.
மோடியின் சகோதரர்களில் ஒருவரான பிரகலாத் மோடி மட்டும் சமீப காலமாக பத்திரிகை செய்திகளில் இடம் பெற தொடங்கி உள்ளார். அவர் சமீபத்தில் ஜோதிடரிடம் சென்று தனது சகோதரர் (பிரதமர் மோடி) மீண்டும் உயர்ந்த பதவிக்கு வருவாரா? என்று கேட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கரோய் என்ற ஊரில் புகழ்பெற்ற ஜோதிடர்கள் பண்டிட் ஓம்பிரகாஷ் வியாஸ் மற்றும் கோபால் வியாஸ் என்பவர்கள் உள்ளனர். தேர்தல் சமயத்தில் இவர்களிடம் வந்து அரசியல்வாதிகள் ஜோதிடம் பார்ப்பது உண்டு.
மோடியின் சகோதரர் பிரகலாத்தும் சமீபத்தில் இவர்களைத்தான் சந்தித்து பேசினார். மோடியின் ஜாதகத்தை கொடுத்து நீண்ட நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
மோடியின் சகோதரரிடம் ஜோதிடர் என்ன தெரிவித்தார் என்பது தெரியவில்லை. #LSPolls #PMModi

×

X