என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரவுன் சுகர்
நீங்கள் தேடியது "பிரவுன் சுகர்"
காஷ்மீரில் ரூ.36 கோடி மதிப்பிலான 12 கிலோ எடையுடைய பிரவுன் சுகர் மற்றும் ஆயுதங்களை எல்லைப்பாதுகாப்பு படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீநகர் :
காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 36 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ எடையுடைய பிரவுன் சுகர் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த 4 பேரை எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று கைது செய்தனர்.
இந்த கைது சம்பவம் குறித்து பேசிய எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி. சோனாலி மிஷ்ரா, ’போதை மருந்து கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்புப்படையின் நுண்ணறிவு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை சாவடிகளில் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
கர்னா பகுதியில் அமைந்துள்ள சத்போரா சோதனை சாவடியில் இரண்டு வாகனங்களை சோதனை செய்த போது, அதில் 12 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 12 கிலோ எடையுடைய பிரவுன் சுகர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன், மொத்த மதிப்பு 36 கோடி ரூபாய் ஆகும். போதைப்பொருளை கடத்தி வந்தவர்கள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளையும் உடன் வைத்திருந்தனர்.
இதையடுத்து, வாகனத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஆலம் பார் மற்றும் யூசுப் கவாஜா எனும் இருவர் மட்டுமே இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது’ என தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாக சோனாலி மிஷ்ரா கூறினார்.

×

X