என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிராங்கோ முல்லக்கல்
நீங்கள் தேடியது "பிராங்கோ முல்லக்கல்"
கேரளா மாநிலத்தில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாதிரியார் பிராங்கோ முல்லக்கல் இன்று கோர்ட்டில் ஆஜரானார். மறுவிசாரணை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #KeralaNun #FrancoMulakkal
திருவனந்தபுரம்:
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ. இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயம் குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி தன்னை பிஷப் பிராங்கோ முல்லக்கல் மிரட்டி கற்பழித்து விட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
மேலும் பிராங்கோவை கைது செய்ய கோரி அந்த மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதைத்தொடர்ந்து பிஷப் பிராங்கோ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
24 நாள் சிறைவாசத்திற்கு பிறகு பிராங்கோ ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதில் போலீசார் தாமதம் செய்வதாக கூறி மீண்டும் கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிஷப் பிராங்கோ மீது கோட்டயத்தில் உள்ள பாலா முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1400 பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 83 சாட்சியங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிராங்கோ முல்லக்கல்லுக்கு எதிராக கேரள போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் வழங்கப்பட்டன.
பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார்.
இயற்கைக்கு மாறான உறவு, சிறை வைத்து மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் பிராங்கோ மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பிராங்கோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. #KeralaNun #FrancoMulakkal
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்கலின் ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் நிராகரித்தது. #FrancoMulakkal #Kerala
கொச்சி:
கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வாடிகனில் உள்ள போப் ஆண்டவரின் அலுவலகத்திற்கு புகார் கடிதமும் அவர் எழுதினார். இதனை தொடர்ந்து பிஷப் செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
கன்னியாஸ்திரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிஷப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக முல்லக்கல் விடுவிக்கப்பட்டார். தற்போது, விசாரணைக்காவலில் உள்ள அவர் ஜாமின் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று நீதிமன்றம் நிராகரித்தது.
கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகாரில் கைதான பிராங்கோ முல்லக்கல் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். #KeralaNun #FrancoMulakkal
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.
பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று முன்தினம் அறிவித்தது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.
இதைத்தொடர்ந்து, எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஈ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவரை, விசாரணைக்காவலில் எடுக்க திட்டமிட்டுள்ள போலீசார், அது தொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
கன்னியாஸ்திரி பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கலை போலீசார் இன்று கொச்சியில் கைது செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேரில் ஆஜரானார்.
வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.
பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் அவரை கொச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். #KeralaNun #FrancoMulakkal
பாலியல் புகாரில் சிக்கிய பிராங்கோ முல்லக்கல், பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Vatican
வாடிகன்:
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேற்று நேரில் ஆஜரானார்.
வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே, இன்றும் இரண்டாவது நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Vatican
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.
கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்ததால் கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ முல்லக்கல் நேற்று நேரில் ஆஜரானார்.
இதற்கிடையே, இன்றும் இரண்டாவது நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை இன்று அறிவித்துள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Vatican
ஜலந்தர் ஆயர் மீது பாலியல் புகார் அளித்த கேரள மாநில கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவை சேர்ந்த பிரதிநிதி வாடிகன் அரண்மனை சென்றுள்ளார். #KeralaNun #BishopFranco #Vaticanpalace
வாடிகன் சிட்டி:
கேரள மாநிலம் கோட்டயம், குருவிலங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கு ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இப்புகார் தொடர்பாக கோட்டயம் போலீசார் ஜலந்தர் சென்று ஆயர் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடத்தினர். மேலும் வருகிற 19-ந்தேதி அவர், கோட்டயம் போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
இதற்கிடையே கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாடிகன் தலையிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்தது.
இதற்கிடையில், பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவ கூட்டுசபையை சேர்ந்த ஸ்டீபன் மேத்யூ நடத்திவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. அவருக்கு ஆதரவாக கத்தோலிக்க சீரமைப்பு இயக்கத்தை சேர்ந்த அலோஷி ஜோசப் என்பவரும் இன்று உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்.
இந்நிலையில், கேரள கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக வாடிகன் அரண்மனை விசாரித்து வருவதாக வெளியான தகவலை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் இன்று மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இப்படிப்பட்ட செய்திகள் பொய்யாக இருக்கலாம். கேரளாவிலும் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களை நீர்த்துப்போக செய்வதற்காக இப்பட்டிப்பட்ட புரளிகளை பிராங்கோ முல்லக்கல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பரப்பலாம்.
வாடிகன் அரண்மனை மூலம் நடவடிக்கை எடுக்க நினைத்தால் ஒரேநாளில் போப்பின் கவனத்துக்கு கொண்டு சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கடிதம் அனுப்பி வைக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். #KeralaNun #BishopFranco #Vaticanpalace

கேரளாவில் இருந்து ஏராளமானோர் இதுதொடர்பாக வாடிகன் அரண்மனைக்கு புகார்கள் அனுப்பியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து, வாடிகன் அரண்மனைக்கான இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி தற்போது வாடிகன் நகருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி கிறிஸ்தவ கூட்டுசபையை சேர்ந்த ஸ்டீபன் மேத்யூ நடத்திவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று எட்டாவது நாளை எட்டியுள்ளது. அவருக்கு ஆதரவாக கத்தோலிக்க சீரமைப்பு இயக்கத்தை சேர்ந்த அலோஷி ஜோசப் என்பவரும் இன்று உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்.
இந்நிலையில், கேரள கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக வாடிகன் அரண்மனை விசாரித்து வருவதாக வெளியான தகவலை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் இன்று மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இப்படிப்பட்ட செய்திகள் பொய்யாக இருக்கலாம். கேரளாவிலும் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் போராட்டங்களை நீர்த்துப்போக செய்வதற்காக இப்பட்டிப்பட்ட புரளிகளை பிராங்கோ முல்லக்கல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பரப்பலாம்.
வாடிகன் அரண்மனை மூலம் நடவடிக்கை எடுக்க நினைத்தால் ஒரேநாளில் போப்பின் கவனத்துக்கு கொண்டு சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கடிதம் அனுப்பி வைக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். #KeralaNun #BishopFranco #Vaticanpalace
×

X