search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிலாய் இரும்பு ஆலை"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு இன்று பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்தார். #PMModi #BhilaiSteelPlant
    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் சென்றார். நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டியை தொடங்கி வைத்த அவர், தலைநகருக்கான புதிய கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார்.

    அதன்பின்னர், ஜகதல்பூர் - ராய்ப்பூர் விமானச் சேவையை தொடங்கி வைத்த அவர், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு இலவச லேப்டாப்கள், கல்வி உதவித்தொகை மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    அங்கிருந்து பிலாய் நகருக்கு சென்ற மோடி, விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.



    அப்போது அவர் பேசுகையில், முன்னர் இங்கு சாலைகள் கூட இல்லை. ஆனால், இப்போது தரமான சாலைகளுடன் கூடிய விமான நிலையமும் அமைய உள்ளது. புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட பிலாய் இரும்பு ஆலை உதவும்.
     
    நயா ராய்ப்பூர் நாட்டின் முதன்மையாக பசுமையான ஸ்மார்ட் சிட்டியாக விளங்குகிறது. தண்ணீர், மின்சாரம், தெரு விளக்குகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு என அடிப்படை கட்டமைப்புகளை கொண்டு விளங்குகிறது.

    நாடு முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு நயா ராய்ப்பூர் சிறந்த உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்தார். #PMModi #BhilaiSteelPlant
    ×