search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாக்பெரி கோஸ்ட்"

    பிளாக்பெரி நிறுவனத்தின் கோஸ்ட் ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிளாக்பெரி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கோஸ்ட் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் மாடலாக இருக்கும் என @evleaks வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் மெட்டல் ஃபிரேம், வளைந்த கார்னர்கள், சிம் ஸ்லாட் மற்றும் ஆன்டெனா கட்-அவுட்கள் போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போனின் இயர்பீஸ்-இன் மேல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    விரைவில் இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் மூலம் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. இதே நிறுவனம் பிளாக்பெரி கீஓனஅ ஸ்மார்ட்போனினை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்பனையும் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமின்றி நேபால், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்தது. 

    முன்னதாக அத்னா, லூனா மற்றும் யுனி என பல்வேறு பெயர்களில் பிளாக்பெரி ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆன நிலையில், தற்சமயம் கோஸ்ட் என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    பிளாக்பெரி கோஸ்ட் ஸ்மார்ட்போன் 6.0 இன்ச் அளவு கொண்டிருக்கும் என்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் டூயல் பிரைமரி கேமரா மற்றும் சக்திவாய்ந்த பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×