search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளே ஆப் சுற்று"

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று சென்னையில் மே 7-ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 8-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 10-ம் தேதியும், இறுதிப்போட்டி ஐதராபாத்தில் மே 12-ம் தேதியும் நடக்கிறது. 

    தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.

    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் அரை மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது. #IPL2019
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத், சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த சுற்றுக்கு பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூர் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.#IPL2018
    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.

    ‘லீக்‘ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். மொத்தம் 56 ‘லீக்‘ ஆட்டமாகும். இதுவரை 48 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 9 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே இதுவரை ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. டெல்லி அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

    ‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையும் மற்ற 2 அணிகள் எவை என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட்டைரர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. இதில் மும்பை, பெங்களூர் அணிகள் எஞ்சிய ஆட்டங்களில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. இதனால் அந்த அணிகளுக்கு கடுமையான சவால் இருக்கிறது.

    பஞ்சாப் அணி 16 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டம் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணி வாய்ப்பை அதிகரித்து கொள்ளும். தோற்றால் கொல்கத்தா, ராஜஸ்தானுடன் இணைந்து விடும் இந்த இரண்டு அணிகளும் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளன. இந்த இரண்டு அணிக்கும் 2 ஆட்டம் இருக்கிறது.

    பெங்களூர் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வெளியேற்றப்படும்.

    கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதும் நாளைய ஆட்டமும், மும்பை- பஞ்சாப் அணிகள் 16-ந்தேதி மோதும் ஆட்டமும் ‘பிளே ஆப்’ வாய்ப்பை முடிவு செய்து விடலாம்.#IPL2018
    ×