search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகாட்டி டிவோ"

    புகாட்டி நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் ஹைப்பர்கார் டிவோ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. #BUGATTIDivo


    பிரான்ஸ் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி தனது லிமிட்டெட் எடிஷன் ஹைப்பர்காரை அறிமுகம் செய்துள்ளது. புகாட்டி டிவோ என்ற பெயரிலி அறிமுகமாகி இருக்கும் டிவோ பல்வேறு கார் பந்தையங்களில் வெற்றி பெற்ற புகழ்பெற்ற கார் பந்தைய வீரர் ஆட்பெர்ட் டிவோ பெயரைத் தழுவி சூட்டப்பட்டுள்ளது.

    உலகம் முழுக்க 40 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. உண்மையில் புதிய புகாட்டி டிவோ சிரோன் மாடலை விட சற்று வேகம் குறைவாக செல்லும். தோற்றத்தில் இருந்து புதிய புகாட்டி கார் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. வழக்கமான சி வடிவம் கொண்ட சில்ஹௌட் உடன் தலைசிறந்த ஏரோடைனமிக் அம்சங்கள் கொண்டிருக்கிறது.



    காரின் பெரும்பாலான பாகங்கள் கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டு, கார் முழுக்க எடை குறைக்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிரான் மாடலை விட புதிய கார் எடை 35 கிலோ வரை குறைந்திருக்கிறது. இத்துடன் டைட்டானியம் லிக்விட் சில்வர் பெயின்ட் நிறம் ஹைப்பர்காரின் ஒவ்வொரு அம்சத்தையும் தெளிவாக காண்பிக்கிறது. காரின் முன்பக்க ஸ்ப்லிட்டர் மட்டும் டிவோ ரேசிங் புளு ஷேட் செய்யப்பட்டுள்ளது.

    புதிய புகாட்டி லிமிட்டெட் எடிஷன் மாடலில் 8.0 லிட்டர் குவாட்-டர்போசார்ஜ்டு W16 இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 1479 பி.ஹெச்.பி. பவர், 1600 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இது புதிய ரேஸ்-டிரைவ் செய்யப்பட்ட டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.  

    புகாட்டி டிவோ லிமிட்டெட் எடிஷன் மணிக்கு அதிகபட்சம் 380 கிலோமீட்டர் வரை செல்லும் படி லாக் செய்யப்பட்டுள்ளது. புகாட்டி சிரான் மணிக்கு 420 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ×