என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புனித அந்தோணியார்"
- புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத்துடன் நடைபெற்றது.
- இன்று கர்த்தர் நாதர் சுவாமி நினைவுத்திருப்பலி அசனம் நடைபெறும்.
கமுதி மெயின் பஜாரில், உள்ள புனித அந்தோணியார் ஆலயம் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடை பெறுவது வழக்கம். அது போல், இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று அந்தோணியார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்பு ஆலயத்தின் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில், கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அருள்சந்தியாகு மற்றும் அருட்தந்தையர்கள் முன்னிலையில் பரத உறவின் முறையினர் இந்த கொடியை ஏற்றினர்.இதில் 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை திருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னர் இரவு புனித அந்தோணியார், புனித ஜெபஸ்தியார், புனித சவேரியார், புனித மிக்கேல் சம்மனசு ஆண்டவர் போன்ற புனிதர்களின் தேர்பவனி மின்னொளி அலங்காரத்துடன் நடைபெற்றது.
ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி நாடார் பஜார், முஸ்லிம் பஜார், செட்டியார் பஜார் என முக்கிய வீதிகள் வழியாக சென்று, நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
இந்த தேர்பவனியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர்த்தர் நாதர் சுவாமி நினைவுத்திருப்பலி அசனம் நடைபெறும். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரத உறவின்முறையார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார்.
- இரவு 8.30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீர் நடக்கிறது.
புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 10-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பெருவிழா மற்றும் உறுதிபூசுதல் விழா, கூட்டு திருப்பலி நடக்கிறது.
இதற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8.30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீர் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை செல்வராயர், உதவி பங்குதந்தை வில்லியம், பங்கு மேய்ப்பு பணிகுழு துணைத்தலைவர் வி.ஏ.எம்.ராஜன், செயலாளர் டி.டி.செல்லத்துரை, துணை செயலாளர் ஜார்ஜ் மலர்கொடி, பொருளாளர் மரியஜார்ஜ் மற்றும் பங்கு மேய்ப்பு பணிகுழு நிர்வாகிகள், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
- வருகிற 18-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது.
- 18-ந் தேதி ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது
கோவை புலியகுளத்தில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழாவுக்கு கோவை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக நேற்று காலை 8 மணிக்கு திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் கலந்து கொண்டு திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து பலூன் பறக்கவிடப்பட்டதுடன், சமாதானத்துக்கு அடையாளமாக புறாக்களும் பறக்கவிடப்பட்டன. அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் எழுப்பினார்கள். வருகிற 18-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. அன்று இரவு ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு அரவக்குறிச்சியை சேர்ந்த பிரான்சிஸ் ஜெரால்டு தலைமையில் நற்கருணை வழங்குதல் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜார்ஜ் தனசேகர் தலைமையிலும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வருகிற 18-ந் தேதி ஆடம்பர தேர்பவனியை முன்னிட்டு அன்று காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. இதில் கோவை மறைமாவட்ட ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் பங்கேற்கிறார். பின்னர் வேண்டுதல் தேர்பவனி நிகழ்ச்சியும், திருப்பலியும் நடக்கிறது.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியாக செல்கிறது. இதில் ஆலய பங்குகுரு ராயப்பன், உதவி பங்குகுரு ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின் புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா, செபஸ்தியார் உருவம் தாங்கிய பெரியதேர் பவனி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2 சப்பரங்கள் வந்தன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் தேர், சப்பர பவனி நடைபெற்றது. அதன் பின் இரவு 7 மணி அளவில் அருட்தந்தை அடைக்கலராஜ் தலைமையில் ஆலயத்தில் நவநாள் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 8 மணியளவில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பங்குத்தந்தை சூசை மைக்கேல் தலைமையில் அருட்தந்தையர்கள் அந்தோணி பாக்கியம், சவரிமுத்து, நிர்மல், பவுல்ராஜ் கஷ்மீர் ஆகியோர் நிறைவேற்றினர்.அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் மிக்கேல் அதிதூதர், புனித வனத்து அந்தோணியார், அன்னை மரியாள், ஆரோக்கிய மாதா ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர்.
நேற்று காலை திருவிழா நிறைவு திருப்பலி, புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கொடி இறக்கமும் நடைபெற்றது.இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் உள்ளே மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தால் முடி சூட்டுவிழா நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை செயலாளர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் வேளாங்கண்ணி பேராலய உதவி பங்குதந்தை டேவிட்தன்ராஜ், கருங்கண்ணி பங்கு தந்தை சவரிமுத்து, திருப்பூண்டி பங்குதந்தை ஆரோஆரோக்கியசாமி மற்றும் அந்தோணிபெர்ணாடு, பிரான்சிஸ், விக்டர் பவுல்ராஜ் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, நற்கருணை ஆசிர், சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
திருவிழாவில் நேற்று மாலை நடந்த திருப்பலியில் சுக்காம்பார் பங்கு தந்தை மரியதாஸ், பூண்டி மாதா பேராலய உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ் , பூண்டிமாதா பேராலய உதவிபங்குதந்தை ஜான்சன், திருச்சி கே.கே.நகர் பங்கு தந்தை ஆரோக்கியசாமி, திருச்சி செம்பட்டு பங்கு தந்தை செபாஸ்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பலிக்கு பின்னர் வண்ணமயமான மின் விளக்கு மற்றும் மல்லிகை மலர் அலங்காரத்தில் புனித அந்தோணியார் சுரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
விழாவை முன்னிட்டு நவநாள்கள் திருப்பலியை பங்குத்தந்தையர் நிறைவேற்றினர். தொடர்ந்து நடைபெற்று வந்த திருவிழாவில் கடந்த 2 நாட்களாக மின் அலங்கார தேர்பவனி நடந்தது.
வேளாங்கண்ணி பேராலய துணை அதிபர் அற்புதராஜ், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜோசப் குழந்தை, கிராம நிர்வாகம் மற்றும் கிராம பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம் மறை மாவட்ட முதன்மை குரு அருளப்பன் கொடியேற்றி வைத்தார். முன்னதாக கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் பங்குத்தந்தை மைக்கேல் ராஜ்செல்வம், உதவி பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ, அன்பு இல்ல இயக்குனர் கஸ்மீர் மற்றும் சகாயராஜ், மைக்கேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலய திருவிழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.
12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு புனித அந்தோணியார் திருவுருவ பவனி நடக்கிறது. திருவிழா நிறைவு நாளன்று காலை 6.30 மணிக்கு பாளை. மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்துகொண்டு ஆராதனையையும், திருவிழா கூட்டு திருப்பலியையும் நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜேம்ஸ், அருட் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்துள்ளனர்.
இதில் இறைமக்கள், புனித அந்தோணியார் நற்பணி மன்றம், இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் இரவு 7 மணிக்கு திருப்பலி நடைபெறும். 5-ந் தேதி தியானம், திருப்பலியை தொடர்ந்து நற்கருணை பவனி நடக்கிறது. 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் தேர்பவனி, 7-ந் தேதி காலை 9 மணிக்கு கொடி இறக்கம், மதியம் அசன விருந்து நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை புனித அந்தோணியார் நற்பணி மன்றம், ஆலய நிர்வாகிகள், ஜெயராஜ் சுவாமிதாஸ், அந்தோணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஏசு ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
- நாகை கடற்கரை சாலையில் உள்ளது பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம்
- பெரிய தேரோட்டம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
நாகை கடற்கரை சாலையில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மாலை 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் புனித அந்தோணியார் மற்றும் திருக்கொடி வைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, ஆலயத்தை வந்தடைந்ததும் கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்