search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித வெள்ளி"

    தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். #13died #SouthAfricachurch #churchwall #churchwallcollapse
    கேப் டவுன்:

    தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமோபோசா கடந்த ஆண்டு வந்தபோது சிதிலமடைந்து வரும் இந்த தேவாலயத்தை புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.

    இந்த மாகாணத்தில் சில நாட்களாக டொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில் நேற்றிரவு இந்த தேவாலயத்தில் புனித வெள்ளிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது மழை நீரில் நனைந்திருந்த தேவாலயத்தின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #13died #SouthAfricachurch #churchwall #churchwallcollapse
    புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். #goodfriday

    புதுச்சேரி:

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து புனித வெள்ளி இன்று நடைபெற்றது. இதையொட்டி புதுவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

    புதுவை தூய ஜென்ம ராக்கினி அன்னை பேராலயத்தில் புதுவை கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவை பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.

    சிலுவை பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

    இதே போல் புதுவையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவை குயவர்பாளையம் எம்.பி.ஏ. சபை சார்பில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நவீனா கார்டனில் நடைபெற்றது. சபை போதகர் நித்திய ஜீவதாஸ் தேவ செய்தி அளித்தார்.

    நிகழ்ச்சியில் ஜார்ஜ், மோசே தலைமையில் ஆண்கள், பெண்கள் குழுவினரின் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சபை ஊழியர்கள் செய்து இருந்தனர். #goodfriday

    அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். #PMremembers #sacrificeofJesus #GoodFriday
    புதுடெல்லி:

    புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும்.

    கல்வாரி மலையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளியன்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.


    இந்நிலையில், இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்றைய நாளில் இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை நாம் நினைவுகூர்கிறோம், அவரது வாழ்க்கை, உயர்வான தத்துவங்கள் மற்றும் அளப்பரிய தீரம் போன்றவை பலருக்கு உத்வேகம் அளிக்கும் பக்கபலமாக அமைந்துள்ளது.

    அநீதி மற்றும் சமத்துவமின்மை நீங்கிய உலகம் உருவாக இயேசு கிறிஸ்துவின் போதனைகள் முக்கியத்துவமான காரணமாகும்’ என குறிப்பிட்டுள்ளார். #PMremembers #sacrificeofJesus #GoodFriday
    ×