என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்
நீங்கள் தேடியது "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்"
சுமார் 150 ஆண்டுகால பழமைவாய்ந்த சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது. #chennaicentral
சென்னை:
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, வெளியூர்களில் இருந்து சென்னை வரும் ரெயில் பயணிகளின் டிக்கெட்டுகளில் முன்னர் சென்னை சென்ட்ரல் என இருந்த பெயர் மாற்றப்பட்டு, ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் உள்ள பெட்டிகளில் செருகி வைக்கப்படும் தகடுகளிலும் பெயர் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இடவசதி கருதி ரெயில்களில் உள்ள பெட்டிகளில் ’எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல்’ என மட்டும் குறிப்பிடுமாறு ரெயில்வே துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது.
ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரெயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway station) தற்போது சென்னை சென்ட்ரல் தட்டிப்பறித்து விட்டது, குறிப்பிடத்தக்கது. #chennaicentral #Nationwideimportance #mgramachandran #mgramachandranrailwaystation

ஆங்கிலத்திலும் Puratchi Thalaivar Dr MGR Central railway station என அச்சிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் முகப்பு வாயிலின் உச்சியில் உள்ள பெயர் பலகை, ரெயில் நிலையத்தின் நடைமேடைகளில் உள்ள அறிவிப்பு பலகைகள் யாவும் ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கணிப்பொறியில் காணக்கிடைக்கும் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பிடியாவிலும் ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் உள்ள பெட்டிகளில் செருகி வைக்கப்படும் தகடுகளிலும் பெயர் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இடவசதி கருதி ரெயில்களில் உள்ள பெட்டிகளில் ’எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல்’ என மட்டும் குறிப்பிடுமாறு ரெயில்வே துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு இந்திய அளவில் மிகப்பெரிய தனிச்சிறப்பு தற்போது கிடைத்துள்ளது.
நாட்டிலேயே மிக நீளமான பெயர் கொண்ட ரெயில் நிலையமாக அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடத்தில் உள்ள ’வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ (Venkatanarasimharajuvaripeta) என்ற ரெயில் நிலையம் முன்னர் அறியப்பட்டிருந்தது.
ஆங்கில எழுத்தில் பார்த்தாலும், தமிழ் அல்லது தெலுங்கு எழுத்து வடிவத்தில் பார்த்தாலும் வெங்கடநரசிம்ஹராஜுவாரிபேட்டா’ ரெயில் நிலையத்துக்கு இருந்த அந்த தனிச்சிறப்பை ’புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம்’ (Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway station) தற்போது சென்னை சென்ட்ரல் தட்டிப்பறித்து விட்டது, குறிப்பிடத்தக்கது. #chennaicentral #Nationwideimportance #mgramachandran #mgramachandranrailwaystation
×

X