என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்களின் பாதுகாப்பு"
- 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும்
- பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் :
பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்து கருத்தரங்கு, பாதுகாப்பு பெட்டி அறிமுக விழா, கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த சமூக நலத்துறை அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் நடைபெற்றது.
இதற்கு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இயக்குநா் த.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்துறை இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை கூடுதல் இயக்குநா் எஸ்.பி.காா்த்திகா ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்ச்சியை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் துவக்கி வைத்தனா்.மாவட்ட கலெக்டர் வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
பெண் தொழிலாளா்கள் அதிகமாக பணிபுரிவது திருப்பூா் மாவட்டத்தில்தான். அந்த வகையில் அனைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 10 பெண் தொழிலாளா்கள் பணிபுரியும் இடத்திலும் பாதுகாப்பு பெட்டி வைக்கப்படும் என்றாா்.
அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியதாவது:-
ஒவ்வொரு அரசு மற்றும் தனியாா் நிறுவனமும் அந்தந்த அலுவலகங்களில் 5 நபா்கள் (50 சதவிகிதம் பெண்கள்) கொண்ட உள்ள புகாா் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து புகாா் வரும் பட்சத்தில் நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழிற்சாலைகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடா்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றாா்.
இதையடுத்து அமைச்சா்கள் புதிய திருப்பூா் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பாதுகாப்பு பெட்டியை வழங்கி ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து சமூக நலத்துறையில் சிறந்த பணியாளா்களுக்கான விருது பெற்ற 3 நபா்களுக்கு ரூ.5ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசு, மாற்றுத் திறனாளிகளின் நலத் துறை சாா்பில் 18 நபா்களுக்கு ரூ.12,500 மதிப்பில் செல்போன் உள்ளிட்டவற்றை அமைச்சா்கள் வழங்கினா்.
இதில் திருப்பா் மேயா்தினேஷ்குமாா், மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மகளிா் ஆணைய உறுப்பினா் கீதா நடராஜன், திருமுருகன்பூண்டி நகா்மன்றத் தலைவா் குமாா், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா்கள், ராமகிருஷ்ணன் (பனியன் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க பொது செயலாளா்), திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் எம்.ராஜாசண்முகம், ஏ.சி.ஈஸ்வரன் (சைமா தலைவா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரெயில்களில் சமீப காலமாக பெண்களுக்கு பல கொடுமைகள் நடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் இந்திய ரெயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இரவு நேரங்களில் பெண்கள் பெட்டிகளில் பெண் போலீசார் இருக்க வேண்டும். பெண்கள் பெட்டிகளை எளிதாக கண்டறிய வித்தியாசமாக பெயிண்ட் அடிக்கப்படும். ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவசர காலங்களில் பெண்கள் உதவியை பெற ரெயில்களில் பானிக் பட்டன் ஒன்று வைக்கப்பட உள்ளது. பெண்கள் தங்களுக்கு உதவு தேவைப்படும் போது அந்த பட்டனை அழுத்தினால், ரெயில் பெட்டியில் இருக்கும் ரெயில்வே ஊழியருக்கு தகவல் சென்று சேரும். இதன் மூலம் எளிதாக உதவியை பெற முடியும் என வடகிழக்கு ரெயில்வே தலைமை பி.ஆர்.ஓ. சஞ்சய் யாதவ் தெரிவித்தார். #panicbutton #northeasternrailway
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்