என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பேட்ட தணிக்கை சான்றிதழ்
நீங்கள் தேடியது "பேட்ட தணிக்கை சான்றிதழ்"
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட படத்தில் இடம்பெறும் சில வன்முறை காட்சிகளுக்கு தணிக்கை குழு முட்டுக்கட்டை போட்டுள்ளது. #Petta #Rajinikanth #PettaCensoredUA
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் `பேட்ட'. ரஜினியுடன் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா நடித்து இருக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சமீபத்தில் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் வழக்கப்பட்டது. சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 2 மணிநேரம் 51 நிமிடங்களுக்கு படக்குழு சமர்ப்பித்த படத்தில் சென்சார் குழு எந்த காட்சியையும் நீக்கவில்லை.
ஆனால் துப்பாக்கியால் சுடும் காட்சியின் நீளத்தை குறைத்துக்கொள்ள கூறியிருக்கிறார்கள். ரத்தம் தெறிக்கும் சில வன்முறை காட்சிகளைக் கறுப்பாகக் காட்டச்சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும் பல இடங்களில் வார்த்தைகளுக்கு `பீப்' சத்தம் கொடுக்கும்படியும் படக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஜினியின் முந்தைய திரைப்படமான 2.0 மொத்தம் 147 நிமிடங்கள் நீளமுடையது. அதைவிட 25 நிமிடங்கள் அதிக நீளம் கொண்டிருக்கிறது பேட்ட திரைப்படம். #Petta #Rajinikanth #PettaCensoredUA
ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘பேட்ட’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #PettaCensoredUA
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் நிலையில், பேட்ட படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் சிம்ரன், திரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
#PettaCensoredUA@rajinikanth@karthiksubbaraj@anirudhofficial@VijaySethuOffl@SimranbaggaOffc@trishtrashers@SasikumarDir@Nawazuddin_S@lyricist_Vivek@sonymusicsouthpic.twitter.com/jWZ6aOXSWp
— Sun Pictures (@sunpictures) December 21, 2018
சமீபத்தில் வெளியாகிய பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Petta #Rajinikanth
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X