என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பேராசிரியர் பணியிடங்கள்
நீங்கள் தேடியது "பேராசிரியர் பணியிடங்கள்"
சென்னை ஐ.ஐ.டி.யில் 28 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #ChennaiIIT
இந்தூர்:
நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.களில் போதுமான பேராசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த காலிப்பணியிடங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் சந்திரசேகர் என்ற ஆர்வலர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்து உள்ளது.
அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. உள்பட நாட்டின் முக்கியமான 8 ஐ.ஐ.டி. நிறுவனங்களில் மொத்தம் 65,824 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 6,318 பேராசிரியர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 4,049 பேராசிரியர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இதன் மூலம் 36 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
இதில் அதிகபட்சமாக வாரணாசி ஐ.ஐ.டி.யில் 52 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. மேலும் கரக்பூர் (46), ரூர்க்கி (42), கான்பூர் (37), டெல்லி (29), சென்னை (28), மும்பை (27), கவுகாத்தி (25) போன்ற ஐ.ஐ.டி.கள் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்றன. நாட்டின் பழமையான மற்றும் முக்கியமான ஐ.ஐ.டி.களில் இவ்வாறு அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்து கல்வியாளர்கள் கவலை வெளியிட்டு இருக்கின்றனர். #ChennaiIIT

×

X