search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்முடி எம்எல்ஏ"

    செம்மண் குவாரி வழக்கு நேற்று விழுப்புரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ.ஆஜராகவில்லை. விசாரணையை நீதிபதி 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ponmudimla

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்.எல்.ஏ., ராஜமகேந்திரன், கவுதமசிகாமணி, லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ. உள்பட 8 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி 8 பேரும் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பிரியா உத்தரவிட்டார்.

    இதேபோல் பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கும் இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ., விசாலாட்சி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் 6 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. தொடர்ந்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இந்த வழக்கின் விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  #ponmudimla

    சொத்து வரி உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #dmkprotest

    விழுப்புரம்:

    தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி விழுப்புரத்தில் புதுவை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட அவைத்தலைவரும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வுமான ராதாமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், டாக்டர் முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகர செயலாளர் (பொறுப்பு) சர்க்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகா மணி, கல்பர்ட் ராஜா, முருகன், ஜெயம் ரவி, வேம்பி ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளர் தயா இளந்திரையன், மாவட்ட தொண்டர் படை அமைப்பாளர் கபாலி, துணை அமைப்பாளர் அமர்ஜி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் வினோத், கல்வி தாளாளர் கோதகுமார், நகர துணை செயலாளர்கள் புருஷோத்தமன், ஜோதி பிரகாசம், தனலட்சுமி கார்டன் பாலமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmkprotest

    ×