search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் கைது"

    உத்தரபிரதேசத்தில் என்ஜினீயரை சுட்டுக் கொன்ற போலீஸ்கார் கைது செய்யப்பட்டார். #policemanarrest

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவைச் சேர்ந்தவர் விவேக் திவாரி (38). என்ஜினீ யரான இவர் மல்டி நே‌ஷனல் கம்பெனியில் அதிகாரியாக பணிபுரிந்தார்.

    இன்று அதிகாலை 1.30 மணியளவில் தன்னுடன் பணிபுரிந்த ஒருவரை ஆடம்பர சொகுசு காரில் அழைத்து வந்தார். லக்னோவின் புற நகரான கோம்தி நகர் விரிவாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு ரோந்து சென்ற 2 போலீசார் அவரது காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் சுட்டார். அதில் விவேக் திவாரி மீது குண்டு பாய்ந்தது.

    உடனே அவரை லக்னோவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் பிரசாந்த்குமார் மற்றும் உடன் இருந்த மற்றொரு போலீஸ் காரரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்த சைகை காட்டிய போது நிற்காமல் சென்றனர். பின்னர் எங்களது மோட்டார்சைக்கிள் மீதும், எங்கள் மீதும் காரை ஏற்ற முயன்றனர்.

    காரை விட்டு வெளியே வரும்படி கூறினோம். வர மறுத்து மீண்டும் காரை ஏற்ற முயன்றார். இதனால் கீழே விழுந்த நான் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டேன் என தெரிவித்தார். #policemanarrest

    எத்தியோப்பியா பிரதமர் பேசிய பொதுகூட்டத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அவரது உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக அடிடாஸ் அபாபா நகர போலீஸ் துணை கமிஷனர் கைதானார். #EthiopiaPM
    அடிடாஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் அடிஸ் அபாபாவில் நேற்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

    பேரணி முடிவில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் அபிய் அஹமத், விடைபெற்று செல்ல ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தார். மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்புவதற்காக கைகளை அசைத்து விடையளித்தனர்.

    அப்போது, மக்கள் கூட்டத்துக்கிடையில் பயங்கர சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்தது. இதனால் பதற்றமடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் பிரதமர் காயங்களின்றி உயிர் தப்பினார். கூட்டத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


    இந்நிலையில், பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதால் அடிடாஸ் அபாபா போலீஸ் துணை கமிஷனர் மற்றும் 8 பேரை உயரதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #EthiopiaPM
    ×