என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் கேமரா
நீங்கள் தேடியது "போலீஸ் கேமரா"
தமிழகத்தில் குற்றங்களை தடுக்க வீடு, கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போரூர்:
வளசரவாக்கம், ராமாபுரம் போலீஸ் நிலையங்களை உள்ளடக்கிய வளசரவாக்கம் சரகத்தில் புதிதாக 1270 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதை இன்று காலை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
50மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமரா என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் எங்களுக்கு அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சரகத்தில் 1270கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் செய்துள்ளதை மனதார பாராட்டுகிறேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஆந்திரா மாநிலத்தில் வைத்து பிடித்தோம் அதற்கு கண்காணிப்பு கேமரா தான் பெரிதும் எங்களுக்கு உதவியாக இருந்தது.
இதேபோல் சமீபத்தில் பள்ளியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட ஒரு குழந்தையை பள்ளி அருகில் ஒரு சிறிய ஜூஸ் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியால் தான் 5 மணி நேரத்தில் மீட்டோம்.
நள்ளிரவு பெண்கள் தனியாக சென்று வீடு திரும்பிட பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு அலுவலகம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் மேலும் சாலையை நோக்கி அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

கூடுதல் கமிஷனர் மகேஷ் குமார் இணை கமிஷனர் மகேஸ்வரி தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன், உதவி கமிஷனர்கள் சம்பத், ஆரோக்யபிரகாசம், வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், அமுதா, கவுதமன், சந்துரு, ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், வேலுமணி, பிரான்சிஸ் ரூபன், பாலமுரளி, கோகிலா, கலைச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது :-
50மீட்டர் இடைவெளியில் ஒரு கண்காணிப்பு கேமரா என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் எங்களுக்கு அதை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சரகத்தில் 1270கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் செய்துள்ளதை மனதார பாராட்டுகிறேன்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஆந்திரா மாநிலத்தில் வைத்து பிடித்தோம் அதற்கு கண்காணிப்பு கேமரா தான் பெரிதும் எங்களுக்கு உதவியாக இருந்தது.
இதேபோல் சமீபத்தில் பள்ளியில் இருந்து கடத்தி செல்லப்பட்ட ஒரு குழந்தையை பள்ளி அருகில் ஒரு சிறிய ஜூஸ் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியால் தான் 5 மணி நேரத்தில் மீட்டோம்.
நள்ளிரவு பெண்கள் தனியாக சென்று வீடு திரும்பிட பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு அலுவலகம் மற்றும் வணிக வளாகம் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் மேலும் சாலையை நோக்கி அந்த கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறைக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை தந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
×

X