search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நடவடிக்கை"

    • அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா?

    சென்னை:

    சென்னையை சேர்ந்த தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கடந்த ஆண்டு சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமார் பற்றியும் அவரது மனைவி ராதிகா பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார்.

    பாரதீய ஜனதா கட்சியில் சேர்வது தொடர்பாக சரத்குமார், ராதிகாவிடம் பேசியதை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதற்கு ராதிகா எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்த நிலையில் ராதிகா சார்பில் அவரது மேலாளர் நடேசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக சரத்குமார் மற்றும் ராதிகா பற்றி அவதூறு கருத்தை கூறியுள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கைது நடவடிக்கை பாய் கிறது. அவர் மீது எந்தெந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது பற்றி சட்ட நிபுணர் களின் கருத்தை போலீசார் கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    • இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் இரவு முதல் அதிகாலை வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன.
    • போலீசாரின் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரமாக இருக்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் சென்னையில் நடை பெறாமல் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் நகரம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இருசக்கர மற்றும் கார் போன்ற வாகனங்கள் இரவு முதல் அதிகாலை வரையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. இது தவிர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பெரியமேடு, எழும்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை செய்தனர். தங்குபவர்களின் பெயர் விவரங்கள், ஆதார்எண் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

    மேலும் ரவுடிகள் செயல்பாட்டை கண்காணித்து பிடிக்கவும் போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர். பழைய மற்றும் புதிய குற்றவாளிகள், கொலை, கொள்ளை, வழிபறி சம்பவங்களை தடுக்கும் வகையில் அதிரடி வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை வரையில் போலீசாரின் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரமாக இருக்கும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னையில் தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார். #MotherArrested
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் குமார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது- வயது 45). தொழில் அதிபரான இவர், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

    அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் பழம்பெரும் சினிமா பட இயக்குனர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவன். எனது உறவினர் ஒருவர் போலீஸ்துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரம்பரியமிக்க எனது குடும்பத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய எனது மகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை என்னிடம் கூறினாள். அதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை விசாரித்தபோது உண்மை என்று தெரியவந்தது.

    எனது 14 வயது மகளிடம், எனது மனைவியே தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். உறவுக்கு மறுத்த எனது மகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். கொல்வதற்கும் துணிந்துவிட்டார். இதற்கு எனது மாமியாரும் உடந்தையாக செயல்பட்டது வருந்தத்தக்க விஷயம்.

    நான் எச்சரிக்கை விடுத்தும் எனது மனைவியும், மாமியாரும் திருந்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து எனது மகளுக்கு தொல்லை கொடுத்த வண்ணம் உள்ளனர். எனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த புகார் மனு மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    போலீசில் புகார் கொடுத்தது தெரிந்ததும் புகார் கூறப்பட்ட பெண்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

    அவர்கள் கும்பகோணத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் கும்பகோணத்திற்கு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.  #MotherArrested

    ×