search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையம் முற்றுகை"

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை யொருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர்.

    இதில் 2 பேர் படுகாயம் அடைந்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் தென்கரை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    காசிமேட்டில் மதுசூதனனின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். #ADMK
    ராயபுரம்:

    காசிமேடு மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தபோது மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மதுசூதனனின் ஆதரவாளரான புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க. வட சென்னை மாவட்ட மீனவர் அணி தலைவர் தேசப்பன், நேற்று இரவு சூரியநாராயணன் தெரு வழியாக வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தேசப்பன் காசிமேடு துறைமுக போலீசில் புகார் செய்தார். அதில், ஜெயக்குமாரின் ஆதரவாளர்களான மணிமாறன், சிவக்குமார், பிரகாஷ் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே தேசப்பன் தாக்கியதாக மணிமாறன் போலீசில் புகார் செய்தார். அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.

    இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்ததால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. தேசப்பன் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருப்பதை அறிந்ததும் மதுசூதனனின் ஆதரவாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷ மிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் பேசி கலைந்து போக செய்தனர். #ADMK
    ×