என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போஸ் வெங்கட்
நீங்கள் தேடியது "போஸ் வெங்கட்"
நடிகர் போஸ் வெங்கட் கன்னி மாடம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர், போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு ‘கன்னிமாடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்தது. இதுபற்றி அவர் கூறியதாவது:-
“தயாரிப்பாளர் ஹஷீரின் முழு ஆதரவு இல்லாவிட்டால், 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இருக்க முடியாது. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ‘கன்னிமாடம்’ படம் மெட்ராஸ் என்றால் என்ன? என்பதை வரையறுக்கும். சாதிக்க நினைக்கும் கனவுகளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களை பற்றிய கதை, இது.
மேட்டுக்குப்பம், விஜயராகவபுரம், சூளைமேடு ஆகிய இடங்களில் அவர்கள் தங்குவது, பொதுவான விஷயம். இதற்காக சென்னையில் அந்த 3 இடங்களிலும் படப்பிடிப்பை நடத்தினோம். ஸ்ரீராம், காயத்ரி ஆகிய இருவரும் கதைநாயகன்-நாயகியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்றார்.
நெல்லையில் உள்ள தியேட்டரில் நடந்த தேவராட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் எனது தந்தை மிகப்பெரிய நடிகர், அவரைப்போல் நடிக்க முடியாது என்றார். #Devarattam #GauthamKarthik
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள ‘தேவராட்டம்‘ திரைப்படம் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்தின் டிரைலர் பல்வேறு தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில்நேற்று மாலை காட்சியின் போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
அதனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு திரையரங்கம் சார்பில், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து தேவராட்டம் படத்தின் டிரைலரை கண்டு ரசித்தனர்.
பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘தேவராட்டம்‘ படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் ஒரு குடும்பத்தினர் போல பழகினர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன்.
எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் முத்தையா கூறும்போது, “தேவராட்டம் எனது 5-வது படம். தமிழ் பண்பாடு, கலாசாரம், உறவு, மண்வாசனை ஆகியவற்றை மையமாக வைத்துதான் படம் எடுக்கிறேன். தமிழ் உறவுகள் நிலைத்து நிற்கவேண்டும். நமது உறவை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளை மையமாக வைத்துதான் படங்கள் எடுத்து வருகிறேன்.
எனது படத்தின் பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கதையை மையமாக வைத்துதான் படத்தின் பெயரை சூட்டுகிறேன். என்றார். #Devarattam #GauthamKarthik #ManjimaMohan
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்
`தேவராட்டம்'.
கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,
என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள்.
ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.
படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan
போஸ் வெங்கட் இயக்கி வரும் புதிய படத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் புதிய அவதாரம் ஒன்று எடுத்துள்ளார். #BoseVenkat #RoboShankar
நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதில் ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியிருக்கிறார்.
இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் கூறும்போது, "நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை துவங்கினேன், அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன். பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். சாதாரண ஒரு தொழிலாளி பாடுவதை போல பாடல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பாடலை பாட நல்ல பிரபலமான ஒரு குரலை தேடினோம். ரோபோ ஷங்கர் குரல் அதற்கு பொருத்தமாக இருந்தது. பாடலின் இறுதி வடிவம் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில யோசனைகள் மற்றும் அனுமானங்கள் இருந்தபோதிலும், இசையமைப்பாளர் ஹரி சாய், அவர் பங்குக்கு சில துள்ளலான விஷயங்களை சேர்த்துக் கொண்டார்.
ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுக நடிகை காயத்ரி (யார் கண்ணன் மகள்), வலீனா ப்ரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிசால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய, இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹரி சாய் இசையமைக்கிறார். சிவ சங்கர் (கலை), விவேகா (பாடல்கள்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), ஜோசப் ஜாக்சன் (டிசைன்ஸ்), ஆர்.பாலகுமார் (ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கிறார்’ என்றார்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நடிகர், நடிகைகள் தங்களது வாங்குகளை பதிவு செய்து வருகிறார்கள். #ChinnathiraiNadigarSangam
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பது வழக்கம்.
சங்கத்தின் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மஹாலில் இன்று தேர்தல் தொடங்கியது.
காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. மொத்தம் உள்ள 1551 ஓட்டுகளில் 12 மணி நிலவரப்படி 425 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
இந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை நிரோஷா, சிவன் சீனிவாசன், ரவிவர்மா, போஸ் வெங்கட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நிரோஷா அணியில், பரத் செயலாளர் பதவிக்கும், எஸ்.ஸ்ரீதர் பொருளாளர் பதவிக்கும், வி.டி.தினகரன், கன்யா பாரதி ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கும் விஜய் ஆனந்த், ரவீந்திரன், மோனிகா, முனிஷ் ராஜா ஆகியோர் இணை செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.
சிவன் ஸ்ரீநிவாசன் அணியில் செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண், துணைத்தலைவராக ராஜசேகர், மனோபாலா, பொருளாளராக ஸ்ரீவித்யா, இணைசெயலாளராக தளபதி தினேஷ், எம்.டி. மோகன். கற்பகவல்லி, சவால் ராம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
போஸ் வெங்கட் அணியில் செயலாளராக பி.கே. கமலேஷ், துணைத் தலைவர் பதவிக்கு சோனியா, எல்.ராஜா, பொருளாளராக நவீந்தர், இணை செயலாளராக க.தேவானந்த், தாடி பாலாஜி, ஸ்ரத்திகா, கே.கமலஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
14 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 4 அணிகள் சார்பில் 56 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
லியாகத் அலிகான், தம்பிதுரை ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துகிறார்கள். #ChinnathiraiNadigarSangam
முதலில் கறுப்பு தாடி, முடியுடன் வலம் வந்த அஜித், தற்போது வெள்ளை முடி தாடியுடன் வலம் வருகிறார். இந்த நிலையில், அவர் விஸ்வாசம் படத்தில் இரண்டு கெட்அப்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Viswasam #AjithKumar
சமீபகாலமாக அஜித் தனது படங்களில் தனது கறுப்பு-வெள்ளை கலந்த இயற்கையான முடியுடன் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் வெள்ளை முடியுடன் நடித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அடுத்து, அஜித் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தையும் சிவா இயக்குகிறார். இதில் கறுப்பு முடியுடன் இளமையாக அஜித் நடிப்பார் என்று கூறப்பட்டது. முன்பு கறுப்பு முடியுடன் அவர் நிற்கும் படங்கள் வெளியாகின. விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்காகத்தான் டை அடித்து போஸ் கொடுத்தார் என்று கூறப்பட்டது.
இப்போது, ஐதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இங்கு படக்குழுவினருடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதில், அஜித் வெள்ளை முடி வெள்ளை தாடியுடன் காணப்படுகிறார். எனவே, அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாதோ என்று வருத்தத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில், இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இளைஞராகவும் வயதான தோற்றத்திலும் வருகிறார். முதலில் வயதான தோற்றத்துக்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பிறகு இளமை தோற்றத்துக்கு அஜித் மாறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் தோன்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar
விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித்தை சந்தித்தது குறித்து இசைமைப்பாளர் இமான் டுவிட்டர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar
விஸ்வாசம் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து பல தகவல்கள் வந்த வண்ணமாக உள்ளன. படக்குழுவினர் அனைவருமே அஜித்துடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விஸ்வாசம் படக்குழுவில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக், மெர்சல் படத்தில் நடித்த குருவி பாட்டி உள்ளிட்ட பலரும் படக்குழுவில் இணைந்துள்ளனர். மேலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
அதேபோல் இசையமைப்பாளர் இமான், நடன இயக்குநர் அசோக் ராஜா, ஒளிப்பதிவாளர் விஜய் தீபக் உள்ளிட்ட பலரும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதில் இமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது பாடல் காட்சி உருவாக்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேநேரத்தில் எளிமையான மனிதரான அஜித், எனது இசைக்கு ஆனந்தமாக நடனமாடுவதை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவ்வாறு கூறியுள்ளார்.
சிவா இயக்கும் இந்த படத்தை சத்யோஜாதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. #Viswasam #AjithKumar #Nayanthara
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X