search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப்ரோக்கோலி சூப்"

    ப்ரோக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள்கள், நம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இன்று ப்ரோக்கோலி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ப்ரோக்கோலி - ஒரு கப்,
    காய்கறி வேக வைத்த தண்ணீர் - 4 கப்,
    வெண்ணெய், சோள மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    வெங்காயம் - ஒன்று,
    தைம் இலை (Thyme leaf) - சிறிதளவு,
    கொத்தமல்லி, துருவிய சீஸ் - சிறிதளவு,
    மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப்ரோக்கோலி நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும்.

    கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.

    இதனுடன் தைம் இலை (Thyme leaf) சேர்த்து, நன்கு வதங்கியவுடன் சோள மாவு சேர்த்து வறுக்கவும்.

    பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும்.

    பிறகு ப்ரோக்கோலி சேர்த்து வேகவிடவும்.

    மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும்.

    வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.

    சத்து நிறைந்த ப்ரோக்கோலி சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×