search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா பள்ளி மாணவி"

    மகாராஷ்டிராவில் இருந்து சென்னைக்கு ஓடிவந்து ஆயிரம் விளக்கு பகுதியில் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவி-மாணவர்களை போலீசார் பத்திரமாக மீட்டு மகாராஷ்டிரா போலீசாரிடம் ஒப்படைத்தனர். #StudentsRescue
    சென்னை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து தனிஷா என்ற 17 வயது பள்ளி மாணவி திடீரென காணாமல் போனார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப்பிரசாத், அவரது சகோதரர் சுஜித் சுரேந்திர பிரசாத் இருவரும் மாயமானார்கள்.

    இது தொடர்பாக அவர்களது பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய செல்போன் மூலம் அம்மாநில போலீசார் 3 பேரும் சென்னையில் இருப்பதை உறுதி செய்தனர். ஆயிரம்விளக்கு பகுதியில் அவர்கள் தங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி நாசிக் போலீஸ் சூப்பிரண்டு திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமி‌ஷனர் செல்வ நாகரத்தினத்திடம் தகவல் தெரிவித்தார். 3 பேரையும் கண்டுபிடிக்க உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து அம்மாநில போலீசார் சென்னைக்கு விரைந்து வந்தனர். நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி, ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்குமார் ஆகியோர் மாணவர்கள் பயன்படுத்திய செல்போனை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

    3 பேரும் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டு மகாராஷ்டிரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    3 பேரும் சென்னை வந்து இங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 3 பேரும் சென்னைக்கு ஓடி வந்துள்ளனர். #StudentsRescue

    ×