search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா முதல் மந்திரி"

    பிரதமர் இருக்கையை கைப்பற்ற இசை நாற்காலி விளையாட்டு போட்டி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் பற்றி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்தார். #DevendraFadnavis #BJP
    மும்பை :

    பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்காக பிராந்திய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் சூரத் மற்றும் மாண்ட்வி மாவட்டங்களை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் கூட்டம் தரம்பூர் பகுதியில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    கிட்டத்தட்ட 20 முதல் 25 கட்சிகள் இணைந்து பா.ஜனதாவை எதிர்த்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. அவர்களால் தங்கள் கட்சி சார்பில் 10 பேரை கூட பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற செய்ய முடியாது. ஆனால் அவர்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர்.



    இசை நாற்காலி விளையாட்டில் இசை நிற்கும்போது நாற்காலியை கைப்பற்றும் நபர் வெற்றி பெற்றவர் ஆகிவிடுவார். இங்கு 25 கட்சிகள் சேர்ந்து பிரதமர் இருக்கைக்காக இசை நாற்காலி விளையாட்டு போட்டியை நடத்துகின்றன. இது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் செயலாகும்.

    2020-ல் இருந்து 2035-ம் ஆண்டுவரை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஆண்டாகும். இந்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்தால் வறுமையில் இருந்து வெளியேறி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும்.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ பிரதமர் நரேந்திர மோடியின் 55 மாத ஆட்சியின் வளர்ச்சியுடன், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன” என்றார். #DevendraFadnavis #BJP
    மராட்டியத்தில் 48 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தயாராகி விட்டது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பாக பேசியுள்ளார். #DevendraFadnavis #BJP
    மும்பை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் புனே, பாராமதி மற்றும் ஷிரூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புனேயில் நடைபெற்றது.

    இதில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். மேலும் கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

    மராட்டியத்தில் நமது கூட்டணி 45 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கீழ் வெற்றிபெற்றால், அது வெற்றியாகவே கருதப்படாது.

    நமது கட்சி உறுப்பினர்கள் மராட்டியத்தில் 45 தொகுதிகளை எனக்காக வென்று தரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு முதலில் நீங்கள் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பலம் பெற்று விளங்கும் பாராமதி தொகுதியை கைப்பற்றவேண்டும். அப்படி செய்தால் 45 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்று விடலாம்.

    ஊழல் புரிந்தவர்களின் கைகளுக்கு மராட்டியத்தில் ஒரு தொகுதி கூட சென்றுவிடக்கூடாது,

    இவ்வாறு அவர் பேசினார்.

    புனேயில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.


    தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

    மராட்டியத்தில் உள்ள 48 தொகுதிகளிலும் முழு பலத்துடன் பா.ஜனதா மோத உள்ளது. அந்த அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி விட்டோம். மராட்டியத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை பாராமதியையும் சேர்த்து 43 இடங்களை பா.ஜனதா கைப்பற்றும். கடைசி தேர்தலில் பாராமதியில் பா.ஜனதா சார்பாக போட்டியிட்ட ராஷ்டிரீய சமாஜ் கட்சி வேட்பாளர் குறைந்த ஓட்டு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.

    அவர் தாமரை சின்னத்தின் கீழ் களம் இறங்கியிருந்தால் நிச்சயம் பா.ஜனதா அந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும். இந்த முறை அந்த தவறு நிச்சயம் நடக்காது.

    மாநிலத்தில் ஏழைகளுக்காகவும், விவசாயிகளின் பிரச்சினையை போக்குவதற்காகவும் அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

    மாநிலத்தின் முழு வளர்ச்சிக்காகவும், தங்களின் வாழ்க்கைகாவும் மக்கள் வரலாற்று பிழையை நிகழ்த்த மாட்டார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராமதி தொகுதி தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. #DevendraFadnavis #BJP 
    உங்களது கடந்த 15 ஆண்டு ஆட்சியுடன் எனது அரசின் செயல் திறனை ஒப்பிட்டு பாருங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தார். #DevendraFadnavis #BJP
    மும்பை :

    அகமத்நகர் மாநகராட்சிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று அகமத்நகரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    முந்தைய ஆட்சியாளர்கள் போதிய திட்டமிடல் இல்லாததால் வரலாற்று ரீதியான நகரங்களை புறக்கணித்தனர்.

    ஆனால் அகமத்நகரில் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிக்காக எனது தலைமையிலான அரசு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளது.



    வேண்டுமானால் எனது 4 ஆண்டு ஆட்சியின் செயல்திறனையும், முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் 15 ஆண்டு ஆட்சி காலத்தின் செயல்திறனையும் ஒப்பிட்டு பாருங்கள்.

    உணவு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பின்மை போன்ற விஷயங்களில் நிலவிய பிரச்சினைகளுக்கு எங்கள் ஆட்சி காலத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

    அகமத் நகரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் தாலுகா அளவிலான தலைவர்கள் தான், யாரும், மாநில அளவிலான தலைவர்கள் இல்லை

    இவ்வாறு அவர் கூறினார்.#DevendraFadnavis #BJP

    ‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் ஒப்புதல் அளித்துள்ளார். #DevendraFadnavis
    மும்பை :

    மராட்டியத்தில் ‘ஜல்யுக்த் சிவார்’ நீர் சேமிப்பு திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் வறட்சி குறித்தும், ‘ஜல்யுக்த் சிவார்’ திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

    அப்போது நீர்சேமிப்பு திட்டத்தில் ஊழல் நடந்ததை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புக்கொண்டார். இருப்பினும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    இது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-



    ‘ஜல்யுக்த் சிவார்’ மிகப்பெரிய அளவில் மக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட்ட முதல் திட்டமாகும். இதில் 5 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

    மிகப்பெரிய அளவில் திட்டம் நிறைவேற்றப்பட்டதால் சில இடங்களில் ஊழல் நடைபெற்றது. இருப்பினும் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளில் இந்த திட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக ஐ.ஐ.டி. வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    மேலும் 75 சதவீதத்திற்கும் குறைவாகவே மழைப்பொழிவு இருந்தபோதும், விவசாயிகள் நிலத்தடி நீர் மூலம் உழவு தொழில் மேற்கொண்டு உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #DevendraFadnavis
    உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் இருந்த சொகுசு கப்பலில் செல்பி எடுத்தமைக்காக மகாராஷ்டிரா முதல் மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். #AmrutaFadnavis #AmrutaFadnavisselfie #AmrutaFadnavisapologises
    மும்பை:

    இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் கடந்த 20-ம் தேதி தொடங்கி வைத்தனர்.

    அங்க்ரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல் வாரம் 4 முறை மும்பையில் இருந்து கோவா சென்று திரும்பும்.

    399 பயணிகள் மற்றும் 67 பணியாளர்கள் இதில் செல்லலாம். 8 வித கட்டணங்களில் அறைகள் மற்றும் நீச்சல் குளம், மனமகிழ் கூடம் ஆகியவை இந்த சொகுசு கப்பலில் உள்ளன. வாரம் 4 முறை செல்லும் இந்த பயணத்துக்கான கட்டணமாக 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த சொகுசு கப்பலின் முதல் பயணத்தின் தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதாவும் வந்திருந்தார். சொகுசு கப்பலில் அழகில் மெய்மறந்த அம்ருதா பட்னாவிஸ் பலவித கோணங்களில் நின்று தனது கைபேசியால் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.


    உற்சாக மிகுதியினால் ஒருகட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான நுனிப் பகுதிக்குள் தாவி குதித்தார். இதை கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரும், அம்ருதாவின் பாதுகாவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கிருந்து மேலே ஏறிவருமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்த அம்ருதா, கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியில் நின்றவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

    அம்ருதாவின் அஜாக்கிரதையை பலர் குற்றம்சாட்டி கருத்துகளை பதிவிட்டனர். ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியின் மனைவியை உயிரை பணயம் வைத்து இப்படி நடந்து கொள்வது முறையா? என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.


    இந்நிலையில், மராத்தி மொழி செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு இச்சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த அம்ருதா பட்னாவிஸ், ‘நான் ஏதாவது தவறு செய்ததாக சிலர் கருதினால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

    நான் செல்பி எடுக்க முயன்ற இடம் அவ்வளவு ஆபத்தான பகுதி அல்ல என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால், இதுபோல் செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் சவாலான காரியங்களில் ஈடுபட கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். #AmrutaFadnavis  #AmrutaFadnavisselfie #AmrutaFadnavisapologises 
    மகாராஷ்டிரா முதல் மந்திரியின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சொகுசு கப்பலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலில் செல்பி எடுத்த சம்பவம் காவலர்களை பதற வைத்தது. #AmrutaFadnavis #AmrutaFadnavisselfie
    மும்பை:

    இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    இந்த தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதாவும் வந்திருந்தார். சொகுசு கப்பலில் அழகில் மெய்மறந்த அம்ருதா பட்னாவிஸ் பலவித கோணங்களில் நின்று தனது கைபேசியால் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.



    உற்சாக மிகுதியினால் ஒருகட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான நுனிப் பகுதிக்குள் தாவி குதித்தார். இதை கண்டு அங்கு காவலுக்கு நின்றிருந்த போலீசாரும், அம்ருதாவின் பாதுகாவலர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கிருந்து மேலே ஏறிவருமாறு அவர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்த அம்ருதா, கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியில் நின்றவாறு உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #AmrutaFadnavis  #AmrutaFadnavisselfie
    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குடும்பத்துக்கு மாவோயிஸ்ட்கள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். #FadnaviMaoistthreat
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் கடந்த மாதம் போலீசாருடன் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 16 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மாவோயிஸ்ட்டுகள் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். முதல் மந்திரி அலுவலக முகவரிக்கு அடுத்தடுத்து அனுப்பப்பட்ட இரு மிரட்டல் கடிதங்கள் தொடர்பாக உளவுத்துறையினர் விசாரித்து வருவதாகவும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில உள்துறை அமைச்சகம் இன்று குறிப்பிட்டுள்ளது. #FadnaviMaoistthreat 
    ×