search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவையில் விவாதம்"

    மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் தொடங்கியது. #NoConfidenceMotion #NoConfidenceDebate
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதில் தெலுங்குதேசம் அளித்த நோட்டீசை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்த அனுமதி அளித்தார்.



    அதன்படி பாராளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. தெலுங்கு தேசம் கட்சி எம்பி ஜெயதேவ கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். விவாதத்தின் முடிவில் மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

    விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 மணி  33 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும், பிஜூ ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்களும், சிவசேனாவுக்கு 14 நிமிடங்களும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 7 நிமிடங்கள், சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 6 நிமிடங்கள்,  லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 நிமிடங்கள். மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பெரும்பான்மையை நிரூபித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த் குமார் தெரிவித்தார்.  #NoConfidenceMotion #NoConfidenceDebate #MonsoonSession 
    ×