என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மக்னா யானை"
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தோட்டங்களில் கடந்த சில மாதங்களாக மக்னா எனும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருகிறது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோட்டங்களில் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதுடன் காவலாளிகளையும் தாக்கியது.
இதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் கலீம், மாரியப்பன் ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைத்தனர். அதன் பிறகு ஒற்றை யானை நடமாட்டம் அடியோடு நின்றது.
2 மாதங்களாக தேவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கும்கி யானைகள் மீண்டும் டாப் சிலிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டன. இதனால் ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளது.
நேற்று மூனாண்டிப்பட்டி, தேவாரம் ஆகிய பகுதிகளில் புகுந்து சேதப்படுத்தியது. இன்று காலை தாழையூற்று பகுதியில் உள்ள மணி என்பவரது தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த 5 தென்னை மரங்களை முறித்தது. மேலும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த கப்பைக்கிழங்கு செடிகளையும் சேதப்படுத்தியது.
கும்கி யானைகள் இங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த போது ஒற்றை யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் இப்பகுதியில் நிரந்தரமாக அதனை விரட்டும் வரை கும்கி யானைகளை தங்க வைக்க வேண்டும்.
இவ்வையெனில் யானையை விரட்டுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்:
கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்னா யானை தேவாரம் வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது. இரவு நேரங்களில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
மேலும் மக்னா யானை தாக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே யானையை பிடித்து கேரள வனப்பகுதியில் விடவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதற்காக பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
தற்போது 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு மக்னா யானையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். இருந்த போதும் மக்னா யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று அவர்களுக்கு போக்கு காட்டி வருகிறது.
ஆனால் மக்னா யானை பிடிபட்டால் மட்டுமே அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியாக சென்று வரமுடியும். எனவே யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி அருகே தேவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை, வாழை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர்.
மேற்குதொடர்ச்சி வனப்பகுதியில் வசித்து வரும் மக்னாயானை அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு புகுந்த மக்னா யானை சோளப்பயிர்களை நாசப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டமடைந்தனர். இரவு நேரத்தில் தோட்டக்காவலுக்கும் செல்ல அச்சமடைந்தனர்.
இதனால் பெரம்புட்டிஓடை, சாக்கலூத்துமெட்டு பகுதியில் வனத்துறையினர் வெடிவெடித்தும், ஓசைஎழுப்பியும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருந்தபோதும் மக்னா யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தற்போது மீண்டும் இங்குள்ள விளைநிலங்களில் புகுந்து 20 தென்னைமரங்கள் மற்றும் மரவள்ளி கிழங்குகளை சூறையாடிச்சென்றது.
இதைபார்த்து விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனஅலுவலர் ஜீவனா தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், மக்னா யானையால் தினமும் அவதியடைந்து வருகிறோம். காவலுக்கு செல்லக்கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதேநிலை தொடர்ந்தால் விவசாயம் செய்வது பெரும் சவாலாகிவிடும். எனவே வனத்துறையினர் மக்னா யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்