search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சு வாரியர்"

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் ’அசுரன்’ படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய  பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். அவரது காட்சிகள் படமாகி வருவதாகவும், அவரது பெரும்பாலான காட்சிகள் தனுசுடன் இணைந்து வரும்படி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. அவர் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய `வட சென்னை' படத்தில் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    எழுத்தாளர் பூமணியின் `வெக்கை' புத்தகத்தை தழுவி, இடம் கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier #BalajiSakthivel

    தனுஷ் நடிப்பில் `அசுரன்' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் மகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    வட சென்னையை தொடர்ந்து ’அசுரன்’ படப்பிடிப்பை தொடங்கி உள்ளது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் நாயகியாக மலையாள திரையுலகின் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். அவருக்கு இது முதல் நேரடி தமிழ்ப்படம்.

    முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாசை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்தவர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது.



    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier #KenKarunas

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் இணையும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

    படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் தனுஷ் கையில் வேல் கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று வெளியான மற்றொரு போஸ்டரில் தனுஷ் - மஞ்ச வாரியர் இருவரும் 1980-களில் இருப்பது போன்ற தோற்றம் வெளியாகி உள்ளது.


    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier

    வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தனுசுடன் நடிப்பதை எதிர்நோக்கி உற்சாகமாக உள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். #Asuran #Dhanush #ManjuWarrier
    மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனுஷின் `அசுரன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த கருத்தை குறிப்பிட்டு, மஞ்சு வாரியர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `இது தான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி. நானும் உற்சாகமாக உள்ளேன்'


    இவ்வாறு கூறியுள்ளார்.

    படப்பிடிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. முதற்கட்ட திருநெல்வேலியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #Asuran #Dhanush #ManjuWarirer

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் `அசுரன்' படத்தில் இணைந்திருக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குடியரசு தினத்தன்று துவங்கவிருக்கிறது.


    இந்த நிலையில், இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுவே மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.



    நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணையும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Asuran #Dhanush #ManjuWarrier

    மலையாள திரையுலகில் பிரபலமாக இருக்கும் மஞ்சு வாரியரை ரசிகர்கள் விமர்சித்ததற்கு நடிகை ரீமா கல்லிங்கல் ஆதரவு கொடுத்துள்ளார். #RimaKallingal #ManjuWarrier
    தமிழ், மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு கோஷ்டி பிரச்சினை கொடுத்து வருகிறது. மலையாள சினிமாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் மீது அங்குள்ள நடிகைகள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    திலீப்புக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மஞ்சுவாரியர் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ‘ஓடியன்’ மலையாள படத்தில் நடித்தார். இப்படம் சில வாரங்களுக்கு முன்னர் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

    படம் வெற்றி பெறாததற்கு காரணம் மஞ்சுவாரியர் அப்படத்தில் நடித்திருந்ததுதான் என சமூக வலைதளங்களில் மோகன்லால் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த விமர்சனத்தை கண்டு மஞ்சுவாரியரின் தோழியும் நடிகையுமான ரீமா கல்லிங்கல் கோபம் அடைந்தார். அவர் மஞ்சுவாரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.



    இதுபற்றி அவர் கூறும்போது, ‘இந்த படம் ஹிட் ஆகியிருந்தால் அதன் வெற்றிக்கு காரணம் மஞ்சுவாரியர் என்று யாரும் சொல்லியிருக்கப்போவதில்லை என்பது உறுதி. அப்படியிருக்கும்போது தோல்விக்கு மட்டும் மஞ்சுவாரியர் மீது வீண் பழிபோடுவது ஏன்?’ என கேட்டு இருக்கிறார் ரீமா. இவர் தமிழில் பரத்துக்கு ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தவர்.
    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் நவ்யா நாயர், சினிமாவில் அறிமுகமாகும் போது, சங்கடத்தில் இருந்த எனக்கு திலீப் தைரியம் தந்ததாக கூறியுள்ளார். #NavyaNair #Dileep
    அழகிய தீயே படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார். 2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான். 

    திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமா அனுபவங்கள் குறித்து நவ்யா நாயர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நான் நடித்த முதல் மலையாள படம் இஷ்டம். 2001-ல் வெளியானது. டைரக்டர் சிபி மலயில் எனது போட்டாவை பார்த்துவிட்டு ஒரு ஓட்டலுக்கு அழைத்து நடிப்பு திறமையை பரிசோதித்தார். அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை பார்த்த திலீப்புக்கு எனது நடிப்பு பிடித்ததால் இஷ்டம் படத்தில் நடிக்க அவரும், மஞ்சுவாரியரும் என்னை தேர்வு செய்தனர்.



    அப்போது வேண்டாம் என்று அவர் ஒதுக்கி இருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இருக்க முடியாது. அதன் படப்பிடிப்புக்காக போட்டோ ஷூட் எடுத்தனர். அப்போது திலீப் எனது தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். உடனே எனக்கு படபடப்பு ஏற்பட்டது. இதய துடிப்பும் அதிகமானது. 

    கிராமத்தில் இருந்து வந்த என்மீது அறிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் சங்கடத்துக்கு உள்ளானேன். அதை புரிந்துகொண்ட திலீப் பயப்பட வேண்டாம். எல்லோரும் ஆதரவாக இருப்போம். இந்த படத்தில் ஒன்றாக பணியாற்ற போகிறோம் என்று தைரியம் சொன்னார். அதை எப்போதும் மறக்க முடியாது.’’

    இவ்வாறு நவ்யா நாயர் கூறினார். #NavyaNair #Dileep

    வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன் லால் - மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒடியன்' படத்தின் விமர்சனம். #Odiyan #OdiyanReview #MohanLal #ManjuWarrier
    கேரளாவின் மலபார் பகுதியில் வாழ்ந்த ஒடியனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்காத அந்த காலத்தில், ஒடியன் என்று அழைக்கப்படுபவர்கள், விலங்குகளை போல வேடம் தரித்துக் கொண்டு ஒருவரை பயம்கொள்ளச் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர். அந்த வகையில் கடைசி ஒடியனாக வருகிறார் மோகன்லால்.

    மோகன் லாலுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த மஞ்சு வாரியருடன் காதல் வருகிறது. ஆனால் தனது காதலை மஞ்சு வாரியரிடம் சொல்லாமல் மறைக்கிறார். மறுபுறம் மஞ்சு வாரியரிக் முறைமாமனான பிரகாஷ்ராஜ், மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அத்துடன் கண் பார்வையற்ற மஞ்சு வாரியரின் தங்கையையும் அடைய நினைக்கிறார்.

    பிரகாஷ்ராஜின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் மஞ்சு வாரியர், நரேனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான சில காலங்களில் நரேன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.



    அதேபோல் மஞ்சு வாரியரின் பார்வை தெரியாத தங்கையின் கணவரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இந்த இரண்டு மரணங்களுக்கும் மோகன்லால் தான் காரணம் என்று மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நினைக்கிறார்கள்.

    இதனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார் மோகன்லால், மஞ்சு வாரியரின் மகளின் மூலம் உண்மைகளை அறிந்து சொந்த ஊருக்கு திரும்பி அந்த இருவிரன் கொலைக்கும் காரணமானவரை எப்படி பழிதீர்க்கிறார்? மோகன் லால் தனது சுயரூபத்தை காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மோகன் லால் ஒடியன் கதாபாத்திரமாக சிறப்பாக நடித்திருக்கிறார். இளம்வயது மற்றும் முதிர்ச்சியான தோற்றம் என ரசிக்கும்படியாக நடித்துள்ளார். குறிப்பாக ஒடியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.



    மஞ்சு வாரியர் மோகன் லால் மீதான காதல், தனது வாழ்க்கை, தனது தங்கையின் வாழ்க்கை என இரண்டையும் தொலைத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் பக்குவம் காட்டுகிறார். பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் கருத்த தோளுடன் வரும் பிரகாஷ் ராஜின் தோற்றம் பேசும்படியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி இன்னோசென்ட், சித்திக், மனோஜ் ஜோஸி, நந்து, நரேன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.

    வித்தயாசமான கதையை தொட்டதற்காகவே இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனனுக்கு பாராட்டுக்கள். கதையும், கதைக்கு அச்சாணியாக மோகன் லால், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் என பிரபலங்கள் இணைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை இயக்குநர் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னமும் மெனக்கிட்டிருக்கலாம்.

    எம்.ஜெயச்சந்திரன், சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் `ஒடியன்' பலமில்லை. #Odiyan #OdiyanReview #MohanLal #ManjuWarrier

    ×