என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மணிஷ் திவாரி
நீங்கள் தேடியது "மணிஷ் திவாரி"
மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தால் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். #Sophia #ManishTewari
புதுடெல்லி:
தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.
இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டார். #Sophia #ManishTewari

×

X