search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதசார்பற்ற கட்சி"

    செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில், மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாடு நடத்த முடிவு வெடுத்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற நூலின் திறனாய்வுக்கூட்டம் புதுவையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் விளம்பர பேனர்கள் வைக்க கவர்னர் தடை விதித்துள்ளனர். பிற மாநிலங்களில் கட்டணம் வசூலித்துவிட்டு குறிப்பிட்ட இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும் முறையை புதுவையிலும் கடைபிடிக்க வேண்டும்.

    தமிழக கவர்னருக்கு எதிராக நாமக்கல்லில் அறவழியில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திய தி.மு.க.வினரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம், சென்னை-சேலம் இடையே பசுமை சாலை எதிர்ப்பு போராட்டம், கவர்னர் எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மட்டுமின்றி நச்சு தன்மை கொண்ட தொழிற்சாலைகளை மூடுவதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் விவசாயி கள், பொதுமக்களிடம் கருத்தை கேட்டு அறிந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள் மீது அடக்குமுறையை அரசு மேற்கொள்ளக் கூடாது.

    வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில், மதசார்பற்ற கட்சிகளை இணைக்கும் மாநாடு நடத்த முடிவு வெடுத்துள்ளோம்.

    மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.

    இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan #Parliamentelection #Karnatakaassemblyelection

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- கர்நாடக தேர்தல் முடிவுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் சுமார் 50 இடங்களை காங்கிரஸ் கட்சி இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. தேவேகவுடா தலைமையிலான மதசார் பற்ற ஜனதாதளம் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.

    இதன்மூலம் மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறினால் பா.ஜனதா வலிமை பெருகும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்திருந்தால் பா.ஜனதாவை எளிதாக வீழ்த்தியிருக்க முடியும்.

    கே:- கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில் நீங்கள் காங்கிரசுடன் மதசார் பற்ற சக்திகள் இணைய வேண்டும். என்று பேசுவது சரியா?

    ப:- கர்நாடக தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றிபெற்று இருந்தாலும் அவர்கள் காங்கிரசைவிட குறைவான சதவீத வாக்குகளை பெற்று இருக்கிறார்கள். காங்கிரஸ் 75 இடங்களில் வெற்றிபெற்று இருந்தாலும் பா.ஜனதாவை விட கூடுதலான வாக்குகளை பெற்று இருக்கிறது.

    எனவே காங்கிரஸ் பலவீனப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. பாராளுமன்ற  தேர்தலின் போது பா.ஜனதாவை வீழ்த்தும் அளவிற்கு வலிமையுள்ள மாற்று காங்கிரஸ் தான்.

    காங்கிரசுடன் இணைந்து இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறோம்.

    கே:- கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தது போல கர்நாடகாவிலும் நடப்பதாக தெரிகிறதே?

    ப:- மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசும் முயற்சியில் பா.ஜனதா தீவிரமாக இறங்கி உள்ளது. எனவே தங்கள் உறுப்பினர்களை தக்கவைத்து கொள்ளும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

    கே:- கர்நாடக தேர்தல் முடிவு தமிழகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

    ப:- மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து பயணப்பட வேண்டும் என்பதை கர்நாடக தேர்தல் மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. எனவே தி.மு.க. தலைமையிலான தோழமை கட்சிகள் இன்னும் வலுவாக இணக்கமுடன் செயல்படும் என்று நம்புகிறேன்.

    கே:- விடுதலை சிறுத்தை கட்சிகளின் விருது வழங்கும் விழாவில் கேரள முதல்வர் பங்கேற்காதது ஏன்?

    ப:- அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் பயணம் செய்ய இயலவில்லை. அதனால் அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்தரை அனுப்பி வைத்தார். அவர் விழாவில் பங்கேற்று முதல்வருக்கு பதிலாக சிறப்புரை ஆற்றினார்.

    இவ்வாறு அவர் கூறினர்.
    #Thirumavalavan #Parliamentelection #Karnatakaassemblyelection

    ×