என் மலர்
நீங்கள் தேடியது "மது"
- கரண் தனது மனைவியிடம் மது குடிக்க ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
- குடிபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மனைவி குடிக்க பணம் தராததால் விரக்தியடைந்த கணவன் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் கரண் (26) என்ற நபர் வசித்து வருகிறார். அவர் தனது மனைவியிடம் மது குடிக்க வேண்டுமென்று ரூ.500 தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் குடிபோதையில் இருந்த கரண் உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அங்கு கூடிய மக்கள் அவரிடம் பணம் தருவதாகவும், மது பாட்டில் வாங்கித் தருவதாகவும் கூறி கீழே இறங்க சொல்லியுள்ளனர்.
காரனின் தாயார் சமபவ இடத்திற்கு வந்து அவரை கீழே இறங்குமாறு கெஞ்சியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கரணை கீழ் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வப்போது கீழே இறங்கி வரும் கரண் மீண்டும் மேலே ஏறி போலீசாருக்கு நீண்ட நேரமாக போக்கு காட்டியுள்ளார். பின்னர் போலீசாரின் நீண்ட நேர முயற்சிக்கு பின்பு கரண் கீழே இறங்கி வந்தார்.
- நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
- டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குடிப்பிரியர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதனால், கூடுதல் கட்டணத்தை தடுக்கும் வகையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, டாஸ்மாக்கில் வாங்கும் மதுவுக்கு பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, காஞ்சிபுரத்தில் மாவட்ட மேலாளர் தலைமையில் நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் 2 வாரங்களில், வாங்கும் மது பாட்டில்களுக்கு பில் கொடுப்பது நடைமுறைக்கு வருகிறது.
மேலும், டாஸ்மாக் கடைகளை கணினி மூலம் ஒருங்கிணைக்க தனி 'சாப்ட்வேர்' உருவாக்கி டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதன்மூலம், கடையில் எவ்வளவு மது இருப்பு மற்றும் விற்பனை குறித்த விவரங்களை கணினி மூலம் அறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நண்பர்களான சைஃப் அலி ,சக்கன் அலி மும்பையில் ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
- மது அருந்துவதற்காக நண்பர்கள் இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர்.
ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நண்பரை கொலை செய்த சைஃப் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சைஃப் அலி மற்றும் சக்கன் அலி அண்மையில் மும்பைக்கு குடிபெயர்ந்து ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மது அருந்துவதற்காக நண்பர்கள் இருவரும் ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது ஆட்டொ கட்டணம் 30 ரூபாயை யார் கொடுப்பது என்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாகி சக்கனை சைஃப் கீழே தள்ளியுள்ளார். அப்போது தலையில் அடிபட்டு சக்கன் அலி உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சைஃப் அலியை கைது செய்தனர்.
- உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தரும்.
- மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
மது அருந்துபவர்கள் சராசரியாக ஒரு நபர் ஆண்டுக்கு 9.5 லிட்டர் ஆல்கஹால் உட்கொள்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிலர் அவ்வப்போது குடிப்பவர்கள். 28 நாட்களுக்கு மது அருந்தாமல் இருப்பது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது பழக்கவழக்கங்களால் நமது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. நமது பழக்க வழக்கங்களால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. சில மாற்றங்கள் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன. சில மாற்றங்கள் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை தரும்.
பொதுவாக, மது குடித்து உறங்கும் நிலையில் மூளையின் இயக்கம் சரியான நிலையில் இல்லாமல் போவதால் ஆழ்ந்த தூக்கம் இருக்காது.
மதுவை கைவிடும் போது மூளையின் இயக்கம் சீராக இருப்பதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
காலையில் எழும் போது ஹேங்க் ஓவர் தலைவலி பாதிப்புகள் நீங்கும். மது உடலில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சிக் கொள்வதால் வாய் நாக்கு வறண்டு விடும். ஆனால், மது குடிக்காதபோது உடலில் நீர் வினியோகம் சரியாக இருக்கும். மது மூளையில் உள்ள மெல்லிய நரம்புகளை பலவீனம் அடையச் செய்துவிடும்.
மூளையின் நினைவாற்றலை கையாளும் பகுதியான "ஹிப்போகேம்பஸ்" என்ற பகுதியை செயல்பட விடாமல் மது தடுக்கிறது. இதனால், நினைவாற்றல் குறையும். எளிதில் எந்த விஷயங்களும் உடனே நினைவுக்கு வராது. ஆனால், மதுவை நிறுத்தியவுடன் மூளை நரம்புகள் பலம் பெறுவதால் நினைவாற்றல் மேம்பட ஆரம்பிக்கும்.
மது உடலின் வளர்சிதை மாற்றத்தை குறைப்பதால் உண்ணும் உணவின் சத்துக்கள் உடலில் உட்கிரகிக்கப்படாமல் போகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.
மதுவை நிறுத்தி விடும்போது வயிறு நன்றாக இருக்கும். செரிமான மண்டலம் பலம் பெற்று குடல் உறிஞ்சிகள் ஊட்டச்சத்துக்களை நன்றாக உறிஞ்சி, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை ரத்தத்தில் சேமிப்பதால் உடல் பலம் பெறும்.
மதுப்பழக்கம் உடலின் தோல் பகுதியில் உள்ள நீர்ச்சத்தை இழக்க செய்வதால் மங்கலான அல்லது வீங்கிய சருமம் மற்றும் தோல் அழற்சியை ஏற்படுத்தும். மதுவை கைவிடும் போது தோலுக்கு போதியளவு நீர்ச்சத்து கிடைத்து சரும ஆரோக்கியம் மேம்படும்.
மதுப்பழக்கம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான முக்கிய காரணமாக அறியப்படுகிறது. மதுவை கைவிடும்போது இதயம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
- டாஸ்மாக் நிறுவனம் முன் வைக்கும் காரணத்தை ஏற்று கொள்ள முடியாது.
- பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
90 மி.லி. மதுவை விற்பனை செய்வதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மிலி மதுவை விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனம் முன் வைக்கும் காரணத்தை ஏற்று கொள்ள முடியாது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மீட்டெடுக்க முடியாத கலாச்சார சீரழிவு படுகுழிக்கு தள்ளப்பட்டு விடும். ரூ. 140 கொடுத்து மது அருந்த முடியாதவர்கள், கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடிப்பதாக டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறைந்த விலையில் டாஸ்மாக் நிறுவனமே மதுவை விற்பனை செய்தால் கள்ளச்சாராயத்தை தடுக்கலாம் என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதை விட மிக மோசமான வாதம் இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டாஸ்மாக் நிறுவனம் கடந்த ஆண்டு 90 மிலி மதுவை டெட்ரா பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் திட்டத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டது. பாமக கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தமிழ்நாடு முன்னிற்கு வரவேண்டும் என்றால் மது, கள்ளச்சாராயம், போதைபொருட்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் எனவும், 90 மி.லி டெட்ரா பாக்கெட் திட்டத்தை கைவிட வேண்டும் என்வும் கூறியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அதை எதிர்த்து பா.ம.க மாபெரும் பேராட்டத்தை நடத்தும் என்று கூறியுள்ளார்.
- மது மற்றும் கஞ்சாவினால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.
- 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் மரணிக்கின்றனர்.
போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்.
மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழக்கின்றனர். மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளது.
2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
- லக்னோவில் உள்ள இந்திரா நகர் செக்டர் 20 பகுதியில் ஒரு மருத்துவர் வீட்டில் நேற்று கொள்ளை நடந்தது.
- அடுத்த நாள் பாண்டேவின் பக்கத்து வீட்டுக்காரர் வீடு திறந்திருப்பதைப் பார்த்து சந்தேகித்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.
லக்னோவில் உள்ள இந்திரா நகர் செக்டர் 20 பகுதியில் ஒரு மருத்துவர் வீட்டில் நேற்று கொள்ளை நடந்தது. இந்திரா நகரில் வசித்து வரும் பாண்டே பல்ராம்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் அவர் வாரணாசிக்கு சில வேலை நிமித்தமாக சென்றிருந்தார்.
அப்போது அவரது வீட்டை நோட்டம் விட்டு திருடன் அவனது கைவரிசையை காட்டலாம் என்று எண்ணி பாண்டேவின் வீட்டை கொள்ளையடிக்க சென்றார். அடுத்த நாள் பாண்டேவின் பக்கத்து வீட்டுக்காரர் வீடு திறந்திருப்பதைப் பார்த்து சந்தேகித்து வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பாண்டேவின் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்துள்ளன.
இதனால் சந்தேகப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காஸிபூர் போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் போது, கொள்ளையடிக்க வந்த கபில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் திருட வந்த இடத்திலேயே மயங்கியுள்ளார். அவனை அலேக்காக தூக்கிய போலீசார் இந்திய தண்டனை சட்டத்தின் 379 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும் போது"அலமாரிகள் உடைக்கப்பட்டன. பணம் உட்பட அனைத்தும் எடுக்கப்பட்டன. வாஷ்பேசின், கேஸ் சிலிண்டர் மற்றும் தண்ணீர் பம்ப் ஆகியவற்றையும் திருடன் திருட முயன்றான்" என்று தெரிவித்தார்.
- படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
- கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு.
செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இந்த படத்தில் பிரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இந்நிலையில், படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மதுவுக்கு எதிரான பாடல் ஒன்று இன்று மாலை வெளியாகிறது.
கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த பாடல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது
ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன
44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன
20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது
30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது
ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது
ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்
மதுவுக்கு எதிராக
நான் எழுதிய ஒருபாடலை
இன்று மாலை வெளியிடுகிறோம்
இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
- தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.
பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட னர்.
ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.
கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர்.
இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
- குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
- ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் விரைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், முஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தில், மது அருந்துவதை தடுத்த மனைவியை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட முனீஸ் சக்சேனா மதுவுக்கு அடிமையானவர். நேற்று இரவு முனீஸ் சக்சேனா குடிபோதையில் வீடு திரும்பியுள்ளார்.
அவரது மனைவி ஷனோ (40), முனீஸ் மேலும் மது அருந்துவதை தடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஸ், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அவருக்கு தீ காயம் ஏற்பட்டுள்ளது.
ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஷவேனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானோவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவரது மாமியார் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது தலைமறைவாக உள்ள சக்சேனாவைத் தேட போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினர்.
- சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார்.
- வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை, நவ.19-
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். விஜயன் கொடுங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார். பின்னர் காலையில் அவர் எழும்பவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தபோது விஜயன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.