search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய சுற்றுச்சூழல்"

    வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதித்துள்ளது. #protectingTajMahal #ASITajMahalmaintenance
    புதுடெல்லி:

    உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவுக்கு ஆண்டுதோறும் சுமார் 75 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் முக்கிய சுற்றுலாத்தலமாக ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹால் திகழ்ந்து வருகின்றது.

    உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும், சலவைக்கற்களால் வடிக்கப்பட்ட கம்பீரக் கவிதையாகவும் நிமிர்ந்து நிற்கும் தாஜ் மஹால் சமீபகாலமாக நிறம் மங்கி, பொலிவிழந்து காணப்படுகிறது.

    இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் தாஜ் மஹாலின் பொலிவும், கவர்ச்சியும் மேலும் மங்கிவிடாதவாறு பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாஜ் மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை இனியாவது வெட்டாமல் தடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எம்.கே.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்.சி. மேத்தா சமர்ப்பித்த புகைப்படங்களை பார்வையிட்ட நீதிபதிகள், முதலில் தாஜ் மஹால் பழுப்பு நிறமாக மாறியது. இப்போது பச்சையாகவும், அடர்சிவப்பு நிறமாகவும் காணப்படுகிறது என்று வேதனை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தாஜ் மஹாலை பராமரிப்பதற்கான வரைவு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு சமீபத்தில் தாக்கல் செய்தது.

     தாஜ் மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


    மிக முக்கியமாக, தாஜ் மஹாலை சுற்றி உள்ள மாசுவை உண்டாக்கும் தொழிற்சாலைகளை மூட இருப்பதாகவும், அதற்கு பதிலாக சுற்றுலா மையம் அமைக்க இருப்பதாகவும் உத்தரப்பிரதேசம் மாநில அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆக்ரா, பைரோஸாபாத், மதுரா, ஹத்ராஸ், உத்தரப்பிரதேசத்தின் எட்டா நற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூர் ஆகிய பகுதிகளில் கான்பூர் ஐ,ஐ.டி. மாணவர்களை கொண்ட குழுவினர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து சுமார் 10,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

    இன்னும் 4 மாதங்களுக்குள் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் மத்திய அரசின் சார்பில் கோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தாஜ் மஹாலை பராமரிப்பது தொடர்பாக ‘யூனெஸ்கோ’ அமைப்பு கடந்த 2013-ம் ஆண்டில் வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து அளித்ததாக தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    தாஜ் மஹால் மீது சர்வதேச அமைப்பான ‘யூனெஸ்கோ’ கொண்டுள்ள அக்கறையைவிட நாம் அதிக அக்கறை காட்ட வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இதனையடுத்து, தாஜ் மஹால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பராமரிக்கும் பொறுப்புகளை தொல்லியல் துறை இயக்குனர்,  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் செயலாளர், ஆக்ரா வட்டார கமிஷனர் ஆகியோர் ஏற்பார்கள் என சுப்ரீம் கோர்ட்டிடம் தொல்லியல் துறை உறுதியளித்துள்ளது.  #protectingTajMahal #ASITajMahalmaintenance
    ×