search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மம்தா கட்சி"

    மேற்கு வங்காள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் மம்தா கட்சி 40 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. சினிமா நட்சத்திரங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. #MamataBanerjee #LokSabha #WomenCandidate
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தை ஆளும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. எந்தக் கட்சியுடனும் கைகோர்க்கவில்லை.

    42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய எம்.பி.க்கள் 5 பேர் போட்டியிடவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள ஜாதவ்பூர் எம்.பி. சுகதா போஸ் தேர்தலில் போட்டியிட அந்தப் பல்கலைக்கழகம் அனுமதி தரவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக சந்தியா ராயும், கட்சிப்பணியாற்றுவதற்காக மூத்த தலைவர்கள் சுப்ரதா பக்‌ஷியும், உமா சோரனும் தேர்தலில் நிற்கவில்லை.

    இந்த தேர்தலில் எங்கள் கட்சி 40.5 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த தேர்தலில் 35 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தினோம். இது பெண்களுக்கு பெருமைமிக்க தருணம்.

    இந்த தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் நஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்கள். தற்போதைய எம்.பி.க்கள் மூத்த நடிகை மூன்மூன் சென், நடிகர் தேவ் (தீபக் அதிகாரி) ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

    மூத்த நடிகை மூன்மூன் சென், மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவுக்கு (பா.ஜனதா) எதிராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ரெயில்வே மந்திரி தினேஷ் திரிவேதிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

    நாங்கள் எந்தக்கட்சியுடனும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன.

    ஜார்கண்ட் மாநிலத்தில் 5 தொகுதிகளிலும், அசாமில் 6 தொகுதிகளிலும், பீகாரில் 2 தொகுதிகளிலும், அந்தமானில் உள்ள ஒரு இடத்திலும் போட்டியிடுகிறோம்.

    உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவு தருவோம்.

    மின்னணு ஓட்டு எந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்களில் மோசடிகள் நடைபெறாமல் தேர்தல் கமிஷன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனக்கு எதிராக நடிகை மூன் மூன் சென்னை மம்தா நிறுத்தி இருப்பது குறித்து மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோ டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

    அதில் அவர் குறிப்பிடுகையில், “எப்போதுமே எனக்கு எதிராக மம்தா சென்-சேசனல் (பரபரப்பான) வேட்பாளர்களையே நிறுத்துகிறார். கடந்த தேர்தலில் தொழிற்சங்க தலைவர் தோலா சென்னை நிறுத்தினார். இந்த முறை நடிகை மூன்மூன் சென்னை நிறுத்தி உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.
    ×