என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மராட்டிய கோர்ட்டு"
மும்பை
தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சினை இருப்பது போல மராட்டியம்-ஆந்திரா இடையே கோதாவரி நதிநீர் பிரச்சினை இருந்து வருகிறது.
2010-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது கோதாவரியில் மராட்டியத்தில் நான்டெட் மாவட்டம் பாப்லி என்ற இடத்தில் புதிதாக அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்தியது.
இதை எதிர்த்து சந்திர பாபுநாயுடு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்களுடன் போராட்டம் நடத்தினார். பாப்லி திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ஐதராபாத்தில் இருந்து பாப்லிக்கு புறப் பட்டார். இதையடுத்து மராட்டிய எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அவரும் 15 எம்.எல்.ஏ.க் களும் மராட்டியத்துக்குள் நுழைய முயன்றபோது மராட்டிய போலீசார் கைது செய்தனர். புனே ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு மராட்டிய மாநிலம் தர்மாபாத் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வக்கீல் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவைத் தொடர்ந்து தர்மாபாத் மாஜிஸ்திரேட்டு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடன் கைதான 15 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 16 பேரையும் கைது செய்து வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு என்.ஆர். கப்பியே உத்தர விட்டுள்ளார்.
தற்போது ஆந்திரா பிரிக்கப்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருக்கிறார். வாரண்டு அனுப்பப்பட்ட 15 பேரில் தேவினேனி உமாமகேஸ்வர ராவ், ஆனந்த்பாபு, ஆகியோர் மந்திரிகளாகவும், கமலாகர் என்பவர் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.
16 பேர் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் வன்முறையை தூண்டி விடுதல், ஆயுதங்களுடன் சென்று காயம் ஏற்படுத்துதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி சந்திரபாபு நாயிடுவின் மகனும் மாநில தகவல் தொழில்நுட்ப மந்திரியுமான என்.லோகேஷ் கூறுகையில் இது மராட்டிய பா.ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் தலைவர்கள் திட்டமிட்ட படி கோர்ட்டில் ஆஜர் ஆவார்கள் என்றார்.
சந்திரபாபு நாயுடு தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற் சவ விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பதி வந்து தங்கி உள்ளார். இதனால் அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. #Chandrababunaidu #Godavariprotestcase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்