என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மரியம் நவாஸ் போட்டி
நீங்கள் தேடியது "மரியம் நவாஸ் போட்டி"
பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். #PakistanElection #MaryamNawaz
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் 120-வது தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார். அதேசமயம், போட்டியிட விரும்புவோர் குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் ஷேபாஸ் ஷெரீப் கேட்டிருந்தார்.
அதன்பின்னர் லாகூரில் உள்ள 125 மற்றும் 127-வது தொகுதிகள் மற்றும் பஞ்சாபில் உள்ள 173-வது தொகுதியில் போட்டியிடுவதற்காக மரியம் நவாஸ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், தற்போது லாகூர் மற்றும் பஞ்சாபில் உள்ள 127 மற்றும் 173-வது தொகுதிகளில் மரியம் நவாஸ் போட்டியிட உள்ளார். கட்சியின் பாராளுமன்றக் குழு இதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக ஜியோ டிவி செய்தி வெளியிட்டுள்ளது. #PakistanElection #MaryamNawaz

×

X