search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலேசிய அரசு"

    மலேசிய அரசின் அட்டார்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாம்மி தாமஸ் நியமனத்துக்கு அந்நாட்டு மன்னர் சுல்தான் முஹம்மது ஒப்புதல் அளித்துள்ளார். #Malaysiaattorneygeneral #ethnicIndianttorneygeneral
    கோலாலம்பூர்:

    இயற்கை எழில் கொஞ்சும் மலேசிய நாட்டில் சுமார் 3 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் மூன்றில் இரு மடங்கினர் பூர்வீக மலாய் மக்களாவார்கள். இதுதவிர புத்த, இந்து, கிறிஸ்தவ மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் இந்நாட்டில் மலேசிய அரசின் ஆட்சி மதமாக இஸ்லாம் இருந்து வருவதால், இங்கு பெரும்பாலும் அரசின் உயர் பதவிகளை முஸ்லிம்களே வகித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மலேசிய அரசின் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றிவந்த முஹம்மது அபான்டி அலி என்பவர் வகித்த பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாம்மி தாமஸ் என்பவரின் நியமனத்துக்கு மன்னர் சுல்தான் முஹம்மது ஒப்புதல் அளித்துள்ளார்.

    கடந்த 55 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பதவியில் நியமிக்கப்படும் முஸ்லிம் அல்லாத நபர் இவர் என்பதால் இந்த நியமனத்துக்கு அந்நாட்டில் பலதரப்பினரிடையே அதிருப்தி நிலவி வருவதாக தெரிகிறது.



    இதை உணர்ந்துள்ள மன்னர் முஹம்மது சுல்தான், நமது நாட்டில் அனைவருக்கும் சம உரிமைகள் அளிக்கப்பட வேண்டும். இதில் மதம் மற்றும் இன வேறுபாடு காட்டாமல் அனைவரும் புதிய அட்டார்னி ஜெனரலுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். #Malaysiaattorneygeneral #ethnicIndianttorneygeneral  
    ×