என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மலையாள வார இதழ்
நீங்கள் தேடியது "மலையாள வார இதழ்"
மலையாள வார இதழில் எழுத்தாளர் ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல அட்டைப்படம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
கொச்சி:
கேரள மாநிலத்தில் வெளிவரும் பிரபல மலையாள வார இதழ் கிரிஹலட்சுமி. இதன் அட்டைப் படத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன், மலையாள எழுத்தாளர் இந்து மேனன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்திருந்தார். அதற்கு கீழே, ‘உற்று பார்க்காதீர்கள்; நாங்கள் தாய்ப்பால் அளிக்க வேண்டும்’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.
பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும் ஆளானது. அட்டைப்பட சர்ச்சை தொடர்பாக வார இதழ் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான மனுவில், மோசமான விளம்பர செயல் என்று வழக்கறிஞர் வினோத் மேத்யூ குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான இதழின் ஆசிரியர், பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே, அட்டைப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை அச்சிட்டிருந்தோம் என்றார்.
முன்னதாக மனைவி தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை, கணவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் அதனை பலர் கிண்டல் செய்திருந்தனர். இதனைத் தடுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கிரிஹலட்சுமி வார இதழ் செயல்பட்டது. அட்டைப்படம் சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்த எழுத்தாளர் இந்து மேனன், தான் செய்தது சரிதான்.
இதற்கு எதிர்வினைகள் வரும் என்று தெரியும். சுதந்திரமாக தாய்ப்பால் கொடுக்க விரும்பும் பெண்களுக்காகவே நான் போஸ் கொடுத்தேன் என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஆபாசம் என்பது பார்ப்பவர் கண்களில் மட்டுமே உள்ளது. எனவே தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான அட்டைப் பட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுவதாக தெரிவித்தது.
×

X