search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் தலைவர்"

    பீகாரில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கை எதிர்த்து டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். #LokSabha #KanhaiyaKumar #GirirajSingh
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம், பெகுசாராய் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் (வயது 32) போட்டியிடுகிறார்.

    இவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கில் சிக்கியவர். இவர் பெகுசாராய் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த அறிவிப்பை டெல்லியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கே. நாராயணா வெளியிட்டு நிருபர்களிடம் பேசினார்.

    அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துபரிஷத் ஆகிய அமைப்புகள் சாதி, இனம் அடிப்படையில் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்பதை வெளிப்படுத்த கடுமையாக உழைத்தவர் கன்னையா குமார். நாட்டில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான அரசியல் முகமாக அவர் ஆகி உள்ளார்” என கூறினார்.
    ×