search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி"

    ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து சி.பி.எஸ்.இ.க்கு கடிதம் எழுத வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. #NeetExam #TamilnaduGovernment #CBSE
    சென்னை:

    சென்னையில் அனைவருக்கும் தொழில் நுட்பம் (டெக் பார் ஆல்) இயக்க நிறுவனர் ஜி.பி.ராம்பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த மாதம் (மே) 6-ந் தேதி நடத்தப்பட்டது. மாணவ-மாணவிகள் அவர்கள் விரும்பிய 12 மொழிகளில் தேர்வு எழுதினார்கள். தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள் இருந்தன.

    அந்த பிழைகளுக்கு சரியாக கணக்கிட்டால் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இதேபோல எந்த மாணவரும் தவறான முடிவை எடுக்க வேண்டாம். எனவே தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதில் வந்த 49 பிழைக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

    ‘நீட்’ தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்? என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. கடந்த 4-ந் தேதி தேர்வு முடிவு வெளியானபோது எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. இந்த 2 புள்ளிவிவரத்திலும் மாணவர்கள் எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் உள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுதுவார்கள் என்று முதலில் புள்ளிவிவரம் வெளியானது. ஆனால் முடிவு வெளியானபோது தமிழகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாக கூறப்பட்டுள்ளது. இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. தமிழகத்திலாவது குறைந்த அளவில் வித்தியாசம். பீகார் மாநிலத்தில் 35 ஆயிரத்து 642 பேர் தேர்வு எழுத உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் முடிவு வெளியானபோது 66 ஆயிரத்து 71 பேர் தேர்வு எழுதியதாக கூறப்பட்டுள்ளது.



    இப்படி அனைத்து மாநிலங்களிலும் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து சி.பி.எஸ்.இ.க்கு கடிதம் எழுத வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #NeetExam #TamilnaduGovernment #CBSE
    ×