என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்சார ரெயில் சேவை"
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மழை தண்ணீர் பல இடங்களில் தேங்கி வடியாத நிலையில் உள்ளது.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் சில இடங்களில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சிறிது நேரம் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
தொடர்ந்து வெள்ளத்தின் அளவு அதிகரித்ததால் ரெயில்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து காலை 10.30 மணியளவில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் எழும்பூரில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழித்தடத்தில் தண்டவாளத்தை வெள்ளம் சூழ்ந்தது.
மின்சார ரெயில்களை இயக்க முடியாததால் காலை 9.15 மணி முதல் கடற்கரை- எழும்பூர் இடையேயான மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு மின்சார ரெயில்கள் புறப்படவில்லை. தாம்பரத்தில் இருந்து வந்த ரெயில்களும் எழும்பூரில் நிறுத்தப்பட்டது. மழை வெள்ளம் வடிவதைப் பொறுத்துத்தான் இந்த வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் கூறினர்.
பேசின்பிரிட்ஜ் - வில்லிவாக்கம் இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால் சென்ட்ரல் மற்றும் கடற்கரை நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 45 ரெயில்கள் நாளை (10-ந் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், கடம்பத்தூர், திருத்தணி, அரக்கோணத்துக்கு நாளை காலை 10.05 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை 18 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை நிலையத்தில் இருந்து இதே ஊர்களுக்கு இயக்கப்படும் 6 ரெயில் மற்றும் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் 18 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை நிலையத்தில் இருந்து திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூருக்கு இயக்க வேண்டிய 3 ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு மதியம் 3 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரெயில் நாளை சென்ட்ரல் - ஆவடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் ஆவடியில் இருந்து திருத்தணிக்கு மாலை 3 மணிக்கு இயக்கப்படும்.
அரக்கோணத்தில் இருந்து காலை 8.10 மணி, திருவள்ளூரில் இருந்து காலை 9.10 மணி, பட்டாபிராமில் இருந்து காலை 10.30 மணி, திருத்தணியில் இருந்து காலை 9.40 மணிக்கு சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஆவடி - சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 11.10 மணிக்கும், பட்டாபிராமுக்கு மதியம் 1.50 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.45 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 11.55 மணி, மதியம் 1.50 மணி மற்றும் 2.25 மணிக்கும், நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1.15 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு காலை 8 மணிமுதல் மதியம் 1.40 மணி வரையும், வேளச்சேரியில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு காலை 8.10 மணியில் இருந்து மதியம் 1.50 மணி வரையும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை நிலையத்தில் மதியம் 2 மணியில் இருந்தும், வேளச்சேரி நிலையத்தில் இருந்து மதியம் 2.10 மணிக்கு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
கடற்கரை - ராயபுரம் இடையே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் ரெயில்கல் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் ரெயில் இன்று முதல் 16-ந் தேதி வரை வண்ணாரப்பேட்டை கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் இந்த ரெயில் பாதை மாற்றி சென்ட்ரல் மூர்க்மார்க்கெட் நிலையத்துக்கு இயக்கப்படும்.
கடற்கரை நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரெயில் நிலையம் மாற்றப்பட்டு நாளை முதல் 17-ந் தேதி வரை சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ElectricTrain
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தின் பல்வேறு பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க் கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இரவு 7.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு அதிகாலை 3.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை காலை 4.40, 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 5.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை (சனிக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 6.40, 9, 10.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 7, 8.15, 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 7.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், பொன்னேரி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 8.25, 9.50, 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைபோல் கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைபோல் சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு காலை 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சூலூர்பேட்டை-பொன்னேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேளச்சேரி-ஆவடி காலை 10.15 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15 மணி, வேளச்சேரி-பட்டாபிராம் மதியம் 12.55 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 1.35 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்படும்.
கடற்கரை-ஆவடி காலை 11.10 மணி, கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05 மணி, கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 1.35 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
திருவள்ளூர்-வேளச்சேரி மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையே இன்றும், திருவள்ளூர்-கடற்கரை மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையே நாளையும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10 மணி ரெயில்கள் 2 நாளும் மூர்மார்க்கெட்டுக்கு திருப்பிவிடப்படும்.
வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று மதியம் 12.15 மணிக்கும், வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், வேளச்சேரி-சூலூர்பேட்டை மதியம் 1.55 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும்.
கடற்கரை-திருத்தணி மதியம் 12.10 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்பேட்டை மதியம் 2.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும்.
ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 2.20 மணிக்கு 2 நாட்களுக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
சென்னை-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர்-விழுப்புரம் இடையே இருமார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு-கடற்கரை காலை 8.10 மணி முதல் இரவு 7.25 மணி வரை ரெயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூர்-கடற்கரை காலை 8, 10.25, 1.45, 5.10 மணி ரெயில்கள் திருமால்பூர்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேல்மருவத்தூர்-கடற்கரை மதியம் 3.30 மணி ரெயில் மேல்மருவத்தூர்-தாம்பரம் இடையேயும், கடற்கரை-செங்கல்பட்டு காலை 7.25 முதல் மாலை 6.35 மணி வரை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-திருமால்பூர் காலை 7.05, 9.50, 1.30, 6 மணி ரெயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயும், கடற்கரை-மேல்மருவத்தூர் காலை 8.25 மணி ரெயில் தாம்பரம்-மேல்மருவத்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் நாளையும், நாளை மறுநாளும் (ஞாயிறு, திங்கட்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 8.15, 9, 11.35 மணி ரெயில்கள் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி காலை 9.30, 10.25 மணி ரெயில்கள் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 8.35 மணி ரெயில் மீஞ்சூர்-சூலூர்பேட்டை இடையேயும், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 9.55 மணி ரெயில் பொன்னேரி-சூலூர்பேட்டை இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 9.50, 10.50, 1.35 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையேயும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காலை 11.20, 12.55 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 10 மணி ரெயில் சூலூர்பேட்டை-மீஞ்சூர் இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 11.15 மணி ரெயில் சூலூர்பேட்டை-பொன்னேரி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கடற்கரை-அரக்கோணம் அதிகாலை 1.20 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும். கும்மிடிப்பூண்டி-கடற்கரை இரவு 9.40 மணி ரெயில் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும்.
இந்த தகவல்களை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #SouthernRailway
சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை (25-ந் தேதி தவிர) மின்சார ரெயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
* மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே இரவு 12.15 மணிக்கும், கும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் இடையே நள்ளிரவு 2.45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
* மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே அதிகாலை 4.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக அதிகாலை 4.55 மணிக்கு இயக்கப்படும் சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எண்ணூரில் இருந்து புறப்படும்.
* கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை இடையே அதிகாலை 5.38 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.
மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
சென்னை-கூடூர் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை), நாளை(திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் பொன்னேரி-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.35 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.15 மணிக்கு சூலூர்ப்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 7.30, 8.35 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.15 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கி புறப்படும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 12.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-பொன்னேரி இடையே நாளை மறுநாள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராயபுரம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக சில குறிப்பிட்ட மின்சார ரெயில்களை ரத்து செய்தும் சில ரெயில் சேவையை மாற்றி அமைத்தும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராயபுரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (வியாழக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* வேளச்சேரியில் இருந்து காலை 10.15 மணிக்கு ஆவடி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் வேளச்சேரியில் இருந்து காலை 11.20 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை-திருத்தணி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* அரக்கோணத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு வேளச்சேரி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு திருப்பி விடப்படும். இதைப்போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 8.50 மணிக்கு வேளச்சேரி நோக்கி புறப்படும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு திருப்பி விடப்படும்.
* மூர்மார்க்கெடில் இருந்து காலை 11.15 மணிக்கு ஆவடிக்கும், மதியம் 12.15 மணிக்கு திருத்தணிக்கும் சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை-திருவள்ளூர் பிரிவு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று(புதன்கிழமை) முதல் 26-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* ஆவடியில் இருந்து அதிகாலை 2.50 மணிக்கு பட்டாபிராம் ராணுவ சைடிங் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* பட்டாபிராம் ராணுவ சைடிங்கில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கி புறப்படும் மின்சார ரெயில் பட்டாபிராம் ராணுவ சைடிங்-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை முன்னிட்டு, மின்சார ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மின்சார ரெயில் சேவையில் கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு ஆவடி நோக்கியும், பிற்பகல் 1.05 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், பிற்பகல் 1.50 மணிக்கு பட்டாபிராம் நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல ஆவடியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து பகல் 12.35 மணிக்கு ஆவடி நோக்கியும், திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், திருவள்ளூரில் இருந்து காலை 11.05 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்களும் இன்று ரத்து செய்யப்படுகின்றன.
திருவள்ளூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் பயணிகள் ரெயிலாக அங்கிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பட்டாபிராம் நோக்கி புறப்படும்.
கடம்பத்தூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும், ஆவடி- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும் வியாசர்பாடி ஜீவா- சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, மூர்மார்க்கெட்டுக்கு மாற்று வழிப்பாதையில் செல்லும்.
சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு திருத்தணி நோக்கியும், பிற்பகல் 2.30 மணிக்கு அரக்கோணம் நோக்கியும், பிற்பகல் 2.45 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கியும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்