search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகமது நபி"

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் 113 ரன்னில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. #IPL2019 #SRHvRCB
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் வார்னர் (100 அவுட் இல்லை), பேர்ஸ்டோவ் (114) ஆகியோரின் சதங்களால் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது.

    பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களம் இறங்கியது. பார்தீவ் பட்டேல், ஹெட்மையர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் பார்தீவ் பட்டேல் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    4-வது ஓவரின் முதல் பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஹெட்மையர் ஸ்டம்பிங் ஆனார். இதே ஓவரின் 4-வது பந்தில் ஏபி டி வில்லியர்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். ஐந்து பந்தில் முன்னணி பேட்ஸ்மேன்களை சாயத்தார். முகமது நபி.



    மெகா இலக்கை நோக்கிச் செல்லும்போது நான்கு ஓவர்களுக்குள்ளேயே 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடம் புரண்டது ஆர்சிபி. 3 ரன் எடுத்த நிலையில் விராட் கோலி சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். 36 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.



    கொலின் டி கிராண்ட்ஹோம் 37 ரன்களும், பிரயாஸ் பர்மன் 19 ரன்களும் அடிக்க 113 ரன்னில் சுருண்டது. ஆர்சிபி. இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

    முகமது நபி 4 ஓவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் அள்ளினார். சந்தீப் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான முகமது நபி மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #BigBash
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் முகமது நபி. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக 2-வது முறையாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே பல லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள். ரஷித் கான் சராசரியாக ஒரு ஓவருக்கு 5.65 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். நபி 5.76 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.



    கடந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக 30 பந்தில் 52 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். நபி இறுதிப் போட்டிக்கான நேரத்தில் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். அந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
    ×