search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிவுகள் வெளியீடு"

    சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

    விடைத்தாள்  திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். கூகுள் தளத்திலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.



    மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பிறந்த தேதி, பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண்ணை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம். #cbseresults #cbse10thresult2018
    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், 1687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #SSLCResult #TNResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது. தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படுகிறது.

    இந்த ஆண்டு பள்ளி மாணாக்கராகவும், தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 10,01,140. பள்ளி மாணாக்கராய் தேர்வெழுதியோர் 9,50,397. மாணவியரின் எண்ணிக்கை  4,76,057. மாணவர்களின் எண்ணிக்கை 4,74,340.

    ஒட்டுமொத்தத்தில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 3.9 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12336. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7083. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5253. மொத்தம் 5584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 5456 அரசுப் பள்ளிகளில் 1687 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. #SSLCResult #TNResult

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க மாணவ, மாணவிகள் குவிந்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இதேபோல பழைய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அரசு மன்னர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபடிவங்கள் கடந்த 11-ந் தேதி முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த விண்ணப்பம் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிளஸ்-2 முடித்த மாணவிகள் கல்லூரிக்கு வந்து விண்ணப்பங்களை வாங்கி செல்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் வருகிற 29-ந் தேதி வரை வேலை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை வினியோகம் செய்யப்படும். இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்திற்கான கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி மாணவிகள் பெற்று கொள்ள வேண்டும். ஆதிதிராவிடர் மாணவிகள் தங்களது சாதிசான்றிதழ்் நகலினை சமர்பித்து விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    கடந்த 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்குவதற்கு புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் குவிந்தனர். இதனால் மன்னர் கல்லூரியில் விண்ணப்ப படிவங்களை வாங்க மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியிலும் மாணவிகள் விண்ணப்ப படிவங்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

    மன்னர் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணி வரையிலும், அரசு மகளிர் கலை கல்லூரியில் வருகிற 29-ந் தேதி மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என அந்தந்த கல்லூரியின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    ×