search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் அமைச்சர்கள்"

    பா.ஜனதா ஆட்சியில் முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #BJP
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சிறப்பு கூட்டத்தில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானத்தின் மீது புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரில் விகிதாசார அடிப்படையில் 7 டி.எம்.சி., தண்ணீரை புதுவைக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும் 4,500 ஹெக்டேர் குறுவை சாகுபடிக்கு புதுவைக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அதுபற்றி கவலையில்லை. புதுவை மாநில விவசாயிகள் நலனை காப்பது அரசின் கடமை. விவசாயிகள் நலனுக்காக போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

    அணை கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு உள்ளது. அப்படி இருந்தும் ஒருதலைபட்சமாக கர்நாடக அரசு முடிவு எடுத்துள்ளது.

    காவிரி நீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையம் இரண்டிற்கும் தனித்தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை எதிர்த்து, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு புதுவை அரசு சார்பில் தொடுக்கப்படும்.



    மாநிலத்தில் எந்த ஆட்சி நடப்பது என்பது முக்கியமல்ல. மாநில மக்கள் நலன்தான் முக்கியம். ஆனால் புதுவையில் உள்ள பா.ஜனதாவினர் மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட டெல்லி செல்கின்றனர். பிரதமர், அமைச்சர்களை பார்க்கின்றனர். பிரதமரை சந்திக்க பலமுறை அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கி கொடுப்பதில்லை. நான் பிரதமரின் இணை அமைச்சராக இருந்திருக்கிறேன். பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன்.

    ஆனால், முதல்-அமைச்சர்களுக்கு மரியாதை இல்லாது போனது தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் தான் நடக்கிறது. காரியம் எதுவும் செய்ய வேண்டாம். முதல்-அமைச்சர்கள் கூறுவதையாவது காது கொடுத்து கேட்க வேண்டும் பாதிநேரம் வெளிநாட்டிலேயே பிரதமர் இருந்தால் நாடு என்ன ஆவது.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். #Narayanasamy #BJP

    ×