என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம்
நீங்கள் தேடியது "முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம்"
ரபேல் போர் விமானத்தின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். #RafaelDeal #Chidambaram #PMModi
கொல்கத்தா:
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால் இதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைகள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு மற்றும் விலை பேச்சுவார்த்தை குழு ஆகியவை ஏன் இருளில் மறைக்கப்பட்டன? பாதுகாப்பு பற்றிய அமைச்சரவை குழுவும் நம்பிக்கைக்கு உரிய ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 526 கோடி ரூபாய் அளவில் வாங்கியது. பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை 1,670 கோடி ரூபாய் அளவில் வாங்கியுள்ளது. இந்த எண்ணிக்கை சரியெனில், போர் விமானம் ஒன்றின் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். #RafaelDeal #Chidambaram #PMModi
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை சேர்த்து சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. #AircelMaxisCase #Chidambaram #CBI
புதுடெல்லி:
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை எனவும், இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விவகாரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சிபிஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. விடுபட்ட சில தகவல்கள், ஆதாரங்களை இணைத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று புதிய குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள், இன்னாள் அரசு அதிகாரிகள் பெயரும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AircelMaxisCase #Chidambaram #CBI
காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. முறையை திருத்தி அமைப்போம் என தெரிவித்தார். #Congress #PChidambaram #GST
காரைக்குடி:
காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மத சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர்.
இந்தி திணிப்புக்கும், இந்துத்துவாவுக்கும் தமிழகத்தில் இடமில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமேயானால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram #GST
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X