என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முன்னாள் பிரதமர் கலிதா ஜியா
நீங்கள் தேடியது "முன்னாள் பிரதமர் கலிதா ஜியா"
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று டிஸ்சார்ஜாகி மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார். #KhaledaZia
டாக்கா:
வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.
ஏற்கனவே ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, டாக்கா நகரில் உள்ள பிரிட்டிஷ் காலத்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்கா உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமர்த்தியது.
அடிக்கடி கால் மற்றும் கை மரத்துப்போகும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவை டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கடந்த 4-10-2018 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட கலிதா ஜியா (73), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கலிதா ஜியா இன்று மீண்டும் டாக்கா சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், கலிதா ஜியாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். #KhaledaZia
×

X